Home Facts - தெரிந்து கொள்ளுங்கள் பெண் ஒருவரின் வயிற்றில் இருந்த 4 அடி நீளப் பாம்பு

பெண் ஒருவரின் வயிற்றில் இருந்த 4 அடி நீளப் பாம்பு

29
0

ரஷ்யாவின் வடக்கு பகுதியில் உள்ள லெவாஷி கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணின் வயிற்றினுள் இருந்து 4 அடி நீளம் கொண்ட பாம்பை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

வழக்கமாக வீட்டின் முற்றத்தில் திறந்தவெளியில் உறங்கும் பழக்கம் கொண்ட அப்பெண்ணின் வயிற்றுக்குள் ஏதோ ஒன்று நெளிவதைப் போன்று உணர்ந்துள்ளார். உடனடியாக அவர் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், உயிருடன் ஏதோ ஒரு உயிரினம் உள்ளே இருப்பதை உறுதி செய்து என்டோஸ்கோப்பி உதவியுடன் அதை வெளியேற்ற முடிவு செய்தனர்.

அறுவை சிகிச்சை அறையில், பெண்ணின் வயிற்றுக்குள் எண்டோஸ்கோப்பி கருவியை உள்ளே செலுத்தி, அந்த உயிரினத்தை பிடித்து வெளியே இழுத்தனர். அப்போதுதான் அது 4 அடி நீளம் கொண்ட பாம்பு என்பதை அறிந்து மருத்துவர்கள் அதிர்ந்து போயினர்.

இந்த காட்சியை அங்கே பணியில் இருந்த மற்றொரு மருத்துவர் வீடியோ எடுத்து வெளியிடஇ அது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here