Home World - உலக செய்திகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சுற்றுலா பயணிகளின் செலவை ஏற்பதாக சைப்ரஸ் உறுதி!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சுற்றுலா பயணிகளின் செலவை ஏற்பதாக சைப்ரஸ் உறுதி!

29
0

கிழக்கு மத்தியதரைக்கடல் தீவு நாடான சைப்ரஸில், சுற்றுலா வந்து கொரோனா வைரஸால் (கொவிட்-19) பாதிக்கப்பட்டவர்களின் அனைத்து செலவுகளையும் ஈடுசெய்வதாக சைப்ரஸ் உறுதியளித்துள்ளது.

மீண்டும் சுற்றுலாத்துறையை மீட்டெடுக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முடிவு சைப்ரஸ் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டுள்ளது.

சைப்ரஸுக்கு வந்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் விடுதி கட்டணம், மருத்துவம் மற்றும் உணவு செலவுகளை ஏற்றுக்கொள்வதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நோயாளிகள் விமான நிலையத்திற்கு வாடகை கார் பயணம் மற்றும் வீட்டிற்கு திரும்பும் விமானத்திற்கு மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

அத்துடன், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சுற்றுலா பயணிகளுக்காக 100 படுக்கைகள் கொண்ட பிரத்தியேகமாக மருத்துவனையொன்று அமையவுள்ளது.

200 சுவாசக் கருவிகளுடன் கூடிய சுமார் 112 தீவிர சிகிச்சை பிரிவுகள் இந்த மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ஒதுக்கப்படும்.

அத்துடன், நோயாளிகளின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிற நெருங்கிய தொடர்புகளுக்காக 500 அறைகள் கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டல் ஒதுக்கப்படும்.

இதேவேளை, சைப்ரஸுக்கு சர்வதேச விமானப் பயணம் ஜூன் 9ஆம் திகதி ஆரம்பமாகின்றது. ஆரம்பத்தில் 19 நாடுகளில் இருந்து, பயணிகள் புறப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் கொவிட்-19 சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

ஜேர்மனி, பின்லாந்து, இஸ்ரேல், கிரீஸ், நோர்வே உள்ளிட்ட 13 நாடுகளுக்கு ஜூன் 20ஆம் திகதி பயணத்தடை நீக்கப்படும்.

தொற்று வீதங்களின் தொடர்ச்சியான மதிப்பீட்டைப் பொறுத்து விமான பயணம் அதிக நாடுகளுக்கு விரிவுபடுத்தப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் பயணிகள் தங்களது சோதனைச் சான்றிதழைக் காட்ட வேண்டியிருக்கும், மேலும் விமானம் முழுவதும் முகக்கவசங்களை அணிய வேண்டியிருக்கும். சைப்ரஸுக்கு வந்தவுடன் அவர்களின் வெப்பநிலை எடுக்கப்படும். மேலும் சில சீரற்ற சோதனைகள் பயணிகளுக்கு எந்த செலவும் இன்றி நடைபெறும்

சைப்ரஸின் பொருளாதாரத்தில் 13 சதவீதம் சுற்றுலா மூலம் நேரடியாக கிடைக்கப்பெறுகின்றது. இந்த ஆண்டு, சுற்றுலா உருவாக்கிய வருவாயில் 2.6 பில்லியன் யூரோக்களில் (2.85 பில்லியன் டொலர்) 70 சதவீதம் இழப்பை நாடு எதிர்பார்க்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here