Home World - உலக செய்திகள் தென்கொரியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொவிட்-19 தொற்று!

தென்கொரியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொவிட்-19 தொற்று!

51
0

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றை சிறப்பாக கட்டுப்படுத்திய நாடு என பாராட்டப்பட்ட தென்கொரியாவில், மீண்டும் வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்றது.

தென்கொரியாவில் புதிததாக 79 புதிய கொரோனா வைரஸ் நோயாளிகள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக, கொரியா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த ஏப்ரல் 5ஆம் திகதிக்குப் பிறகு மிகப்பெரிய தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும்.

புதிய கொரோனா வைரஸ் நோயாளிகளில், 69பேர் உள்நாட்டில் உள்ளவர்கள் என சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தென்கொரியாவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு 11,344பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 269பேர் உயிரிழந்துள்ளனர்.

அண்மையில் சியோலில் இட்டேவோன் இரவு விடுதி வட்டாரத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here