Home India - இந்தியா செய்திகள் தமிழகத்தில் முதல் முறையாக கொரோனாவால் தாதியர் உயிரிழப்பு!

தமிழகத்தில் முதல் முறையாக கொரோனாவால் தாதியர் உயிரிழப்பு!

26
0

தமிழகத்தில் முதல் முறையாக தாதியர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

சென்னை ராஜீவ் காந்தி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த தலைமை தாதியரான சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த ஜோன் மேரி பிரிசில்லா (58 வயது) என்பவரே சிகிச்சை பலனின்றி நேற்று (புதன்கிழமை) இரவு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த தாதியருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

இதனால் அவருக்கு கடந்த 26ஆம் திகதி முதல் ராஜீவ் காந்தி வைத்தியசாலையில் தொடர்ச்சியாக சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா சந்தேகத்தால், அவரது மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தது.

குறித்த பரிசோதனை முடிவுகளும் நேற்று வெளியாகின. அதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் ஜோன் மேரி திடீரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்தள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here