Home India - இந்தியா செய்திகள் சூப்பர் புயல் இன்று கரையை கடக்கிறது!

சூப்பர் புயல் இன்று கரையை கடக்கிறது!

28
0

சூப்பர் புயலாக உருவெடுத்துள்ள அம்பன் புயல் மேற்கு வங்கத்தின் அருகே இன்று (செவ்வாய்கிழமை) கரையை கடக்கிறது.

இதன்காரணமாக புயலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் புயல் மேற்கு வங்கத்தின் திகா மற்றும் வங்கதேசத்தின் ஹதியா தீவுகளுக்கு நடுவே இன்று கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் கரையைத் தொடும்போது மணிக்கு 165 முதல் 175 கிலோ மீட்டர் வேகத்திலும் அதிகபட்சமாக மணிக்கு 195 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்காரணமாக மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்குநர் மொஹாபத்ரா தெரிவித்துள்ளார். இதனால் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களும் பாதிப்புக்கு உள்ளாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் புயலின் பாதிப்பைக் குறைக்கச் செய்துள்ள ஏற்பாடுகள் குறித்து டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

புயலுக்கு இலக்காகும் பகுதியில் பொதுமக்களை அப்புறப்படுத்தத் தயாரிக்கப்பட்டுள்ள திட்டம், மீட்புப் படையினரின் தயார் நிலை ஆகியவை குறித்துப் பிரதமர் மோடி ஆய்வு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here