Home India - இந்தியா செய்திகள் பணிகளை விரைந்து முடிக்காமல் காலம் தாழ்த்தும் அதிகாரிகள் நீக்கப்படுவர் – நிதின் கட்கரி

பணிகளை விரைந்து முடிக்காமல் காலம் தாழ்த்தும் அதிகாரிகள் நீக்கப்படுவர் – நிதின் கட்கரி

33
0

தேசிய நெடுஞ்சாலை திட்டங்களில் பணிகளை விரைந்து முடிக்காமல் காலம் தாழ்த்தும் அதிகாரிகள் பணியில் இருந்து நீக்கப்படுவர் என மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

16 மாநிலங்களில் 740 திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் 28 ஆயிரத்து 304 கி.மீ. நெடுஞ்சாலை பணிகளின் நிலைவரம் குறித்து ஆய்வு செய்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ஏற்கனவே பல முறை எச்சரித்தும் அதிகாரிகள் நெடுஞ்சாலை திட்ட ஒப்பந்ததாரர்களுக்கு விரைவாக ஒப்புதல் வழங்காமல் இழுத்தடிக்கின்றனர்.

குறிப்பாக 50 கோடி ரூபாய் வரையிலான சாலை திட்டங்களுக்கு அனுமதி வழங்க தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட இயக்குனர்கள் பிராந்திய அதிகாரிகள் ஆகியோருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் அவர்கள் முடிவெடுக்க அஞ்சுகின்றனர். அதனால் திட்டம் தொடர்பான ஏராளமான விசாரணைகள் தேங்கியுள்ளன.அதிகாரிகள் தங்களின் பொறுப்பை தட்டிக் கழிப்பதால் திட்டப் பணிகள் துவங்குவது தாமதமாகிறது.

அதனால் இம்முறை நான் ஒரு முடிவு செய்து விட்டேன்.திட்டங்களை தாமதப்படுத்தும் இயக்குனர்கள் பிராந்திய அதிகாரிகள் பதவி இறக்கம் செய்யப்படுவர். அல்லது நீக்கப்படுவர்” எனத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here