Home Cinema - சினிமா செய்திகள் பிரபல தமிழ் நடிகை தனது கணவருடன் ஃபிளிப் சேலஞ்ச்!

பிரபல தமிழ் நடிகை தனது கணவருடன் ஃபிளிப் சேலஞ்ச்!

16
0

‘நண்பன்’, ‘காதலில் சொதப்புவது எப்படி?, ‘பீட்சா’, ‘காஞ்சனா’ உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து ரசிகர்களுக்கு பரீட்சையமானவர் பூஜா ராமச்சந்திரன்.

இவர் நடிக்கவருவதற்கு முன்பு எஸ்எஸ் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக ரசிகர்களிடையே மிகவும் பிரபலம்.

இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். நடிகர் ஜான் குக்கேன் என்பவரை கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். மேலும் இவர் தெலுங்கு பிக்பாஸ் தெலுங்கு சீசன் 2வில் கலந்துகொண்டுள்ளார்.

இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பாடல் ஒன்றுக்கு நடனமாட, அதனை அவர் கணவர் வீடியோ எடுக்கிறார். பின்னர் அதே பாடலுக்கு பூஜாவின் கணவர் ஜான் நடனமாட அதனை பூஜா வீடியோ எடுக்கிறார்.

இதில் என்ன வேறுபாடு என்றால் இருவரும் உடையை மாறி மாறி அணிந்து கொள்கின்றனர். அதாவது ஜான் நடனமாடும் போது பூஜாவின் உடை அணிந்திருக்கிறார். ஜானின் உடையை பூஜா அணிந்திருக்கிறார். இது ஃபிளிப் சேலஞ்சாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here