Home Events - நிகழ்வுகள் கிளிநொச்சி மாவட்ட சர்வமத நல்லிணக்க குழுவினரின் கலந்துரையாடல்!

கிளிநொச்சி மாவட்ட சர்வமத நல்லிணக்க குழுவினரின் கலந்துரையாடல்!

132
0

கிளிநொச்சி மாவட்ட சர்வமத நல்லிணக்க குழுவினரின் கலந்துரையாடலொன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடல் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது.

தேர்தல் காலத்தில் மதங்களைக் கொண்டு மக்களை பிளவுபடுத்தும் வகையில் செயற்படுவதை தவிர்ப்பது தொடர்பாக மதம், இன, மொழி, சாதியை அடிப்படையாகக்கொண்டு பரப்புரைகளை மேற்கொள்வது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட சர்வமத நல்லிணக்க குழுவின் தலைவர் க.பிரகலாதன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வினை சமாதான பேரவை ஏற்பாடு செய்திருந்தது.

இனங்கள், மதங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்குடன் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் சர்வ மத தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here