Home Events - நிகழ்வுகள் மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் மாசிமக இரதோற்சவ பெருவிழா!

மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் மாசிமக இரதோற்சவ பெருவிழா!

135
0

இலங்கையின் சக்தி தலங்களில் சிறப்பிடம் பெறுகின்ற மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் மாசிமக இரதோற்சவ பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகின்றது.

அதற்கமைய ஶ்ரீ முத்துமாரியம்பாள் உள்ளிட்ட உற்சவ மூர்த்திகளுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்றன.

பிராமண உத்தமர்களின் வேத மந்திர உச்சாடனத்துடன் நடைபெற்ற வசந்த மண்டப பூஜைகளில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

அதனையடுத்து, மங்கள வாத்தியங்களின் முழக்கத்துடன் பக்தர்களின் அரோகரா கோசங்களிற்கு மத்தியில் உற்சவ மூர்த்திகளின் உள்வீதி மற்றும் வௌிவீதி வலம் இடம்பெற்றது.

அதன் பின்னர் விநாயகர், முருகப்பெருமான், சிவன் – பார்வதி, முத்துமாரியம்மா, சண்டேஸ்வரி ஆகிய உற்சவ மூர்த்திகள் பஞ்ச இரதங்களில் எழுந்தருளியதன் பின்னர் இரதோற்சவ பெருவிழா இனிதே ஆரம்பமானது.

பால்காவடி, பறவைக்காவடி, ஏந்தியும் கற்பூரச் சட்டி, கரகங்களை சுமந்தும் பக்தர்கள் தமது நேர்த்திக் கடனை நிறைவேற்றி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here