Home Festival - விழாக்கள் கச்சதீவு நோக்கி படையெடுக்கும் இலங்கை இந்திய பக்தர்கள்!

கச்சதீவு நோக்கி படையெடுக்கும் இலங்கை இந்திய பக்தர்கள்!

21
0

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று மாலை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், திருவிழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ளது என இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன்ட் கமாண்டர் இசுறு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

இந்த திருவிழாவில் கலந்துகொள்வதற்காக இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கச்சத்தீவில் ஒன்று கூடவுள்ளனர்.

தற்போது யாழ்ப்பாணம் குறிகட்டுவான் பகுதியிருந்து பெரி படகு ஒன்றின் மூலம் பக்தர்கள் ஏராளமானோர் சென்றுள்ளதாக அங்கிருக்கும் எமது ஐ.பி.சி அலுவலக ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இந்தியாவிலிருந்தும் படகுகள் மூலம் இந்திய பக்தர்களும் வருகைதந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கான அனைத்து வசதிகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இம்முறை திருவிழாவிற்கு பத்தாயிரம் பக்தர்கள் கலந்து கொள்ளவுள்ளதாகவும், அதில் இலங்கையிலிருந்து ஏழாயிரம் பக்தர்களும் இந்தியாவிலிருந்து மூவாயிரம் பக்தர்களும் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here