Home Festival - விழாக்கள் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா கோலாகல ஏற்பாடுகள்!

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா கோலாகல ஏற்பாடுகள்!

21
0

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

இந்த திருவிழாவில் இந்த வருடம் 10 ஆயிரம் பக்கதர்கள் கலந்து கொள்வார்கள் என யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தெரிவித்திருந்தார்.

இதன்படி ஸ்ரீலங்காவிலிருந்து 7000 பக்தர்களும் இந்தியாவிலிருந்து 3000 பக்தர்களும் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த திருவிழாவை முன்னிட்டு இலங்கை, இந்திய ஊடகங்களும் ஒலிப்பதிவு மற்றும் ஒளிப்பதிவு செய்வதற்கு வருகை தந்துள்ளன.

அந்த வகையில் எமது ஐ.பி.சி தமிழ் ஊடகமும் முதலாவதாக அங்கு சென்று ஆலயத்தின் திருவிழா ஏற்பாடுகளை காணொளி மூலமும் புகைப்படங்களாகவும் அனுப்பி வைத்துள்ளனர்.

வருடாந்தம் நடைபெறும் இத்திருவிழாவிற்கான ஏற்பாடுகள் கோலாகலமாக ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கச்சதீவு இலங்கை இந்தியாவுக்கு மத்தியில் அமைந்துள்ளதால் இத்தீவு இலங்கைக்கா இந்தியாவிற்கா சொந்தம் என்ற இழுபறி நிலவி வந்த நிலையில் இத்தீவு இலங்கைக்குரியது என இந்தியாவின் முன்னாள் பிரதமர் எழுத்து மூலம் வழங்கியிருந்தார்.

இதேவேளை இத்தீவை மீண்டும் மீட்க வேண்டும் என்று தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பல்வேறு வகையில் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

தற்போது கச்சதீவை மீட்கும் போராட்டத்தை தாம் ஆரம்பித்துள்ளதாக தமிழக முதலமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here