ஸ்ரீலங்கா அரசின் முடிவை அடியோடு நிராகரித்தார் மனித உரிமை ஆணையாளர்!

மற்றொரு ஆணைக்குழுவை நியமிப்பது என்ற இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் இன்று நிராகரித்தார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத்தொடரில் நேற்று உரையாற்றிய இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன,

“ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் 2015 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் அரசாங்கத்தால் இணை அனுசரணை வழங்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட 30/1, 34/1 மற்றும் 40/1 ஆகிய தீர்மானங்களில் இருந்து விலகுவதாக” அறிவித்திருந்தார்.

அதுமட்டுமல்லாமல் போர்க்குற்ற விவகாரம் தொடர்பாக இலங்கை உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையிலான விசாரணை ஆணைக்குழுவை நியமிக்கும் என நேற்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அறிவித்திருந்தார்.

இந்நிலையில் ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 வது அமர்வில் இன்று (வியாழக்கிழமை) இலங்கை குறித்த அறிக்கையை முன்வைத்து பேசும்போதே மிச்செல் பச்லெட் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை நிராகரித்திருந்தார்.

உள்நாட்டு செயல்முறைகள் கடந்த காலங்களில் பொறுப்புக்கூறலை நிலைநாட்டுவதில் தனிப்பட்ட முயற்சிகள் தொடர்ந்து தோல்வியுற்றன.

எனவே மற்றொரு விசாரணை ஆணைக்குழுவை அமைப்பது என்பது இந்த செயன்முறையை முன்னோக்கி கொண்டு செல்லும் என்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என கூறினார்.

அத்தோடு இதன் விளைவாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மறுக்கப்படுகிறது, மேலும் அனைத்து சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கும் மீண்டும் மனித உரிமை மீறல்களின் இடம்பெறாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றும் அவர் கூறினார்.

ஐ.நா மனித உரிமைகள் சபையில் இலங்கை இணை அனுசரணையில் இருந்து விலகுவதாக அறிவித்தமைக்கு இங்கிலாந்தும் கனடாவும் ஏற்கனவே நேற்றைய தினம் அதிருப்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஸ்ரீலங்கா மீது பாயவுள்ள அடுத்த அம்பு! என்ன செய்யப்போகிறது கோட்டாபய அரசு?

Thu Feb 27 , 2020
x இலங்கை அரசாங்கம் காலநீடிப்பு ஒன்றுக்காகவே ஐ.நா பேரவைக்கு இணை அனுசரனை வழங்கி இருந்ததே தவிர உண்மையாக தமிழருக்கு நீதி வழங்குவதற்காக அல்ல என ஐ.நா முன்றலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர். மனித […]

விழாக்கள்