ரஜினிகாந்த்தின் ‘அண்ணாத்த’ – தல அஜித்துக்கு தம்பி… இப்போ சூப்பர் ஸ்டாருக்கு… ?

ரஜினிகாந்த் தற்போது சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக  தயாரித்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் ‘வீரம்’ படத்தில் அஜித்திற்கு தம்பியாக நடித்த பாலா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.

இதனை பாலா தனது ஃபேஸ்புக் பக்கம் மூலமாக அறிவித்துள்ளார். பாலா தமிழில் ‘அன்பு’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் சில படங்களில் நடித்தவர். மலையாளத்தில் பிஸியாக நடித்து வந்தார்.

பின்னர் சிவா இயக்கத்தில் வீரம் படத்தில் தல அஜித்தின் தம்பியாக நடித்திருந்தார். மேலும் அவர் சமீபத்தில் கார்த்தி – ஜோதிகா இணைந்து நடித்த தம்பி படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். அண்ணாத்த படத்துக்கு டி.இமான் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், சூரி, சதிஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

போதை பயன்படுத்தும் ஆண்கள், செக்ஸ் உறவில் அதிக வலுவுடன் ஈடுபடுவார்கள் என்பது உண்மையா?

Wed Feb 26 , 2020
x ‘ஜி ஸ்பாட்’ (Spot) ஆண்களுக்கு உண்டா?உடலில் இன்பம் தரக்கூடிய அனைத்துப் பகுதிகளுமே ‘ஜி ஸ்பாட்’தான். சில ஆண்கள் ஒரு சில உடல் பகுதியை மிகவும் இன்பம் தரக்கூடியதாகச் சொல்வதும், சிலர் உடல் முழுவதும் இன்பம் […]

விழாக்கள்