சிம்புவின் மாநாடு : ஷூட்டிங்கில் திடீர் மாற்றம்! படக்குழுவின் இப்போதைய ப்ளான் என்ன.?

சிம்புவின் மாநாடு படத்தின் ஷூட்டிங்கில் திடீர் மாற்றம் ஏற்பட்டதாக தகவல் தெரியவந்துள்ளது.

சிம்பு நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் மாநாடு. இத்திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இதில் கல்யாணி ப்ரியதர்ஷன் கதாநாயகியாகவும், பாரதிராஜா, எஸ்.ஜே.சூர்யா, ப்ரேம்ஜி, எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களிலும் நடிக்கின்றனர். யுவன்ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். மாநாடு படத்தின் படப்பிடிப்பு அண்மையில் சென்னையில் நடைபெற்றது.

இந்த நிலையில் மாநாடு படத்தின் ஷூட்டிங் குறித்து முக்கியமான தகவல் தெரியவந்துள்ளது. ஹைதராபாத்தில் ஷூட்டிங் நடத்த திட்டமிட்டிருந்த படக்குழு, அதை சென்னையிலேயே நடத்த முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஆர்ட் டைரக்டர் உமேஷ் தலைமையில் விஜிபி கோல்டன் பீச்சில் மிகப் பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டிருப்பதாகவும், 9 நாட்கள் இங்கு ஷூட்டிங்கை நடத்த படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் நம்பத் தகுந்த கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ரஜினிகாந்த்தின் 'அண்ணாத்த' - தல அஜித்துக்கு தம்பி... இப்போ சூப்பர் ஸ்டாருக்கு... ?

Wed Feb 26 , 2020
x ரஜினிகாந்த் தற்போது சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக  தயாரித்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் ‘வீரம்’ படத்தில் அஜித்திற்கு தம்பியாக நடித்த […]

விழாக்கள்