“மனைவியை பெற்று, குழந்தையை உருவாக்குங்கள்”! சர்ச்சையை ஏற்படுத்திய ராஜபக்சவின் இளைய புதல்வரின் ட்விட்!

“மனைவி ஒருவரை பெற்று குழந்தையை உருவாக்குங்கள்” என்ற பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் ரோகித ராஜபக்சவின் டுவட்டர் கருத்து சர்ச்சையுடன் கேலிக்கு உள்ளாகியுள்ளதையடுத்து அவர் இதற்கு மன்னிப்புக் கோருவதாக தகவல் வெளியிட்டுள்ளார்.

ஏயார் பஸ் கொள்வனவு விவகாரம் குறித்த ஆங்கில ஊடகம் ஒன்று வெயிட்ட செய்தி குறித்து ரோகித ராஜபக்ச டுவிட்டரில் நபர் ஒருவர் “பொது மக்களின் பணத்திலேயே நீங்கள் வாழ்கிறீர்கள் என்று” குறிப்பிட்டு பதில் டுவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் அதற்கு பதில் வழங்கியுள்ள ரோகித ராஜபக்ச, “நாம் தனிப்பட்ட தேவைக்கு பொது மக்களின் பணத்தை பயன்படுத்துவதில்லை. ஏன் நீங்கள் உங்களுக்கு சரியான கல்வியை, வேலையை பெறவில்லை. மனைவி ஒருவரை பெற்று குழந்தையை உருவாக்குங்கள்” என்று மறுபதில் டுவிட் செய்திருந்தார்.

இதேவேளை, பெண் ஒருவரது டுவிட்டுக்கு மறு டுவிட் ஒன்றை இட்ட ரோகித, “உங்களுக்கு சிஜடியை விட அதிகம் தெரியும் போல் தெரிகிறது. எனவே அவர்களுடன் இணைந்து வழக்குகளை விரைவாக முடியுங்கள். இதன்மூலம் உங்களை நிறுவனமாக வைத்திருக்க கூடிய ஆண் நண்பரை கண்டுபிடிக்க முடியும்” என்று கூறியிருந்தார்.

இவை டுவிட்டர் தளத்தில் கேலிக்குரிய முறையில் பலராலும் விமர்சிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நிராகரிக்கப்பட்டது தமிழக அரசின் பரிந்துரை? நளினி உள்ளிட்ட எழுவரின் விடுதலையில் நடப்பது என்ன?

Mon Feb 24 , 2020
x நளினி உள்ளிட்ட 7 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசு அனுப்பிய பரிந்துரையை மத்திய அரசு கடந்த 2018-ம் ஆண்டே நிராகரித்துவிட்டது. அதன்பிறகு மத்திய அரசை கலந்தாலோசிக்காமல், தமிழக […]

விழாக்கள்