கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: சீனா கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம் ஒத்திவைப்பு!

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ், தீவிரமாக பரவிவரும் நிலையில், சீனாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பர்முயுலா-1 கார்பந்தய தொடரின் நான்காவது சுற்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆண்டின் நான்காவது சுற்றான சீனா கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம், எதிர்வரும் மாதம் 15ஆம் திகதி ஷாங்காய் நகரில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு நீண்ட நாட்களாக இருக்கும் என அஞ்சப்படுவதால், சீனா கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம், ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த பந்தயம் எப்போது மீண்டும் நடைபெறும் என அறிவிக்கப்படவில்லை.

ஒட்டுமொத்தமாக கொரோனா வைரஸ் (கோவிட் -19) காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1483 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், சர்வதேச அளவில், (கோவிட் -19) வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64,600ஆக அதிகரித்துள்ளது.

இந்த வருடத்திற்கான முதல் சுற்று அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ன் நகரில் மார்ச் மாதம் 15ஆம் திகதி நடைபெறுகின்றது. அதன்பின் பஹ்ரைனில் 22ஆம் திகதியும், வியட்நாமில் ஏப்பல் 5ஆம் திகதியும் நடைபெறுகின்றது.

இவ்வுலகில் பலராலும் இரசித்து விரும்பி பார்க்கப்படும், அதிவேக கார்பந்தயமான பர்முயுலா-1 கார்பந்தயத்திற்கு, இவ்வுலகில் இரசிகர்கள பல கோடி…

இவ்வாறு புகழ் புத்த பர்முயுலா-1 கார்பந்தயம், ஒவ்வொரு ஆண்டும், 21 சுற்றுகளாக நடைபெறும். ஒவ்வொரு சுற்றும் ஒவ்வொரு நாடுகளில் நடைபெறும்.

இதில் கிட்டத்தட்ட 300 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை நோக்கி, 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்வர்.

இப்பந்தயத்தில் ஆண்டு இறுதியில் யார் அதிக சுற்றுக்களில் வெற்றிபெற்று, அதிக புள்ளிகளை பெறுகிறாரோ அவரே சம்பியனாக தெரிவுசெய்யப்படுவர்.

இதையும் தாண்டி, குறித்த புகழ் பூத்த பர்முயுலா-1 கார்பந்தயம், பல்வேறு வடிவங்களில் நடைபெறுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வானம் கொட்டட்டும் திரைவிமர்சனம்!

Fri Feb 14 , 2020
x சரத்குமார், ராதிகா, விக்ரம்‌ பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் வானம் கொட்டட்டும். மெட்ராஸ் டாக்கீஸ் சார்பாக மணிரத்னம் தயாரித்துள்ள‌ இந்த படத்தை தனா இயக்கியுள்ளார். கொலை வழக்கில் சிறைக்கு […]

விழாக்கள்