டென்னிஸ் புயல் : அடுத்த ஐந்து நாட்களுக்கு வானிலை எச்சரிக்கை!

டென்னிஸ் புயல் பிரித்தானியா நோக்கி வருவதால் அடுத்த ஐந்து நாட்களுக்கு வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை மிகவும் அபாயகரமான நாளாக இருக்கும் என்று வானிலை முன்னறிவிப்பாளர்கள் எச்சரிக்கின்றனர். பலத்த காற்று மற்றும் கடும் மழைக்கான மஞ்சள் எச்சரிக்கைகள் நாட்டின் பெரும்பாலான பகுதிகளை உள்ளடக்கி விடுக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டின் நான்காவது புயலாகப் பெயரிடப்பட்ட டென்னிஸ் புயலினால் பலத்த காற்று மற்றும் கடும் மழை இங்கிலாந்தின் கிழக்குப் பிராந்தியம் நோக்கி நகரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று, வட அயர்லாந்தில் காலை 8 மணி வரை மழை எச்சரிக்கையும் அதே நேரத்தில் இங்கிலாந்தின் வடமேற்கில் முற்பகல் 11 மணி வரை பனிப்பொழிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தன.

தெற்கு ஸ்கொட்லாந்தில் காலையில் அதிக பனிப்புயல் ஏற்படும் அபாயம் உள்ளதாகக் கூறப்பட்டிருந்தது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் ஆலங்கட்டி மழை மற்றும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாளை வெள்ளிக்கிழமை, தெற்கு ஸ்கொட்லாந்து முழுவதும் மழை மற்றும் பனி உருகலுக்கான மஞ்சள் எச்சரிக்கை காணப்படுகின்றது. அத்துடன் பனிப்பொழிவு மற்றும் மூடுபனியும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

யுத்தகாலத்தில் கிரிக்கெட்டே மனித உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான ஒரே வழியாக இருந்து: சங்கா!

Fri Feb 14 , 2020
x 11 வருடங்களின் பின்னர் பாகிஸ்தானுக்கு சென்றுள்ள ஜாம்பவான் குமார் சங்ககார, யுத்தகாலத்தில் கிரிக்கெட்டே மனித உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான ஒரே வழியாக இருந்து என கூறியுள்ளார். கிரிக்கெட் விதிமுறைகளை வகுக்கும் மெர்லிபோன் கிரிக்கெட் கழகம் […]

விழாக்கள்