Home India - இந்தியா செய்திகள் விஜய் மீது வருமான வரித்துறை அதிகாரிகள் அடுத்த கட்ட நடவடிக்கை?

விஜய் மீது வருமான வரித்துறை அதிகாரிகள் அடுத்த கட்ட நடவடிக்கை?

60
0

வருமான  வரித் துறை அதிகாரிகளின் சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து நடிகர் விஜயும்,  பைனான்சியர் அன்புச்செழியனும் ஆஜராகி விளக்கம் அளிக்காததால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து நேற்று (வியாழக்கிழமை) ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து  வருமான வரி வட்டாரங்கள் கூறுகையில்,  “நடிகர் விஜய்,  அன்புச்செழியன் மற்றும் ஏ.ஜி.எஸ். நிறுவனத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக  ஒருவர் மட்டுமே ஆஜரானார்.  மற்ற இருவரும் ஆடிட்டர்களை அனுப்பி விளக்கம் அளித்துள்ளனர்.

விஜய் அன்புச்செழியன் ஆஜராக அவகாசம் கேட்டிருக்கலாம். அவர்களுக்கான அவகாசம் முடிந்த நிலையில் உயர் அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுத்திருக்கலாம்” எனத் தெரிவித்துள்ளன.

மதுரையைச் சேர்ந்த பைனான்சியர் அன்புச்செழியன்  மீதான வரி ஏய்ப்பு முறைப்பாட்டில் சென்னை மற்றும் மதுரையில் உள்ள  அவருக்கு சொந்தமான இடங்களில்  வருமான வரித் துறை அதிகாரிகள்  நான்கு நாட்கள் சோதனை நடத்தினர்.

அதில்  கணக்கில் காட்டப்படாத  77 கோடி ரூபாய் ரொக்கம் பல்வேறு சொத்து ஆவணங்கள் மற்றும் பிகில் பட வசூல் தொடர்பான ஆவணங்கள் சிக்கியிருந்தன.

இதனையடுத்து  பிகில் படத்தை தயாரித்த  ஏ.ஜி.எஸ் நிறுவன உரிமையாளர் கல்பாத்தி அகோரம்  தலைமை செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி அகோரம் ஆகியோரின் வீடு,  அலுவலகம், நடிகர் விஜய் வீட்டிலும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here