வாக்குக்கு பணம் கொடுத்தால் மூன்றாண்டுகள் சிறை – ஆந்திராவில் புதிய சட்டம்!

உள்ளுராட்சி தேர்தலில் வாக்கினை பெற்றுக்கொள்வதற்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று ஆந்திர அரசு அறிவித்துள்ளது.

ஆந்திராவில் விரைவில் உள்ளுராட்சி தேர்தலை நடத்த அரசு முடிவு செய்துள்ள நிலையில், இது தொடர்பாக ஆந்திர அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தகவல் தொடர்புதுறை அமைச்சர் நானி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், “ஆந்திராவில் வருகிற மார்ச் 15-ந் திகதிக்குள் உள்ளுராட்சி தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பஞ்சாயத்து ராஜ் சட்டத்திலும்  சில மாற்றங்களை செய்யவும் முடிவு செய்யப்பட்டது.

இதன்படி உள்ளுராட்சி தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், மதுபானம் போன்றவற்றை வழங்கும் வேட்பாளர்கள்  பிடிபட்டால் அவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. தேர்தல் வெற்றிக்கு பிறகு இந்த முறைகேடுகள் நிரூபிக்கப்பட்டால் அவர்களின்  பதவி பறிக்கப்படும்.

இந்த குற்றங்களுக்கான சிறை தண்டனை தற்போது 3 முதல் 6 மாதங்கள் வரை உள்ளது. இனி இந்த குற்றங்களுக்கான தண்டனை 3 ஆண்டுகளாக உயர்த்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

அந்தவகையில் ஒரே நாளில் 1 இலட்சம் பேருக்கு அரசு வேலை வீடு தேடி வரும் ரேசன் பொருட்கள் திட்டம் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் தாய்மார்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் தாய்மடி திட்டம் என பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார்.

பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோருக்கு 21 நாட்களில் தூக்கு தண்டனையை நிறைவேற்றும் திஷா சட்டம்,  வீடு தேடி வரும் பென்சன் என தொடர்ச்சியாக அறிவித்த திட்டங்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

விஜய் மீது வருமான வரித்துறை அதிகாரிகள் அடுத்த கட்ட நடவடிக்கை?

Fri Feb 14 , 2020
x வருமான  வரித் துறை அதிகாரிகளின் சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து நடிகர் விஜயும்,  பைனான்சியர் அன்புச்செழியனும் ஆஜராகி விளக்கம் அளிக்காததால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து நேற்று (வியாழக்கிழமை) ஆலோசிக்கப்பட்டதாக […]

விழாக்கள்