அமர்நாத் குகைக் கோயிலுக்கான யாத்திரை ஆரம்பமாகிறது!

அமர்நாத் குகைக் கோயிலில் தோன்றும் பனிலிங்கத்தை தரிசனம் செய்யும் இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை எதிர்வரும் ஜூன் 23ஆம் திகதி ஆரம்பமாகின்றது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் ஆளுநர் கிரீஷ் சந்திர முர்மு தலைமையில் 37ஆவது கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் முடிவில், இவ்வாண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூன் 23ஆம் திகதி முதல் ஓகற்ஸ் 3ஆம் திகதிவரை 42 நாட்கள் நடைபெறவுள்ளது எனத் தெரிவித்தனர்.

ஜம்மு-காஷ்மீரில் அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி இலிங்கத்தைத் தரிசிக்க ஜம்மு வழியாக இலட்சக்கணக்கான யாத்திரீகர்கள் பயணம் செய்வார்கள்.

இதனிடையே, பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக அமர்நாத் யாத்திரைக்குப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரைக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக ஜம்மு ராஜ்பவன் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வாக்குக்கு பணம் கொடுத்தால் மூன்றாண்டுகள் சிறை – ஆந்திராவில் புதிய சட்டம்!

Fri Feb 14 , 2020
x உள்ளுராட்சி தேர்தலில் வாக்கினை பெற்றுக்கொள்வதற்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று ஆந்திர அரசு அறிவித்துள்ளது. ஆந்திராவில் விரைவில் உள்ளுராட்சி தேர்தலை நடத்த அரசு முடிவு செய்துள்ள நிலையில், […]

விழாக்கள்