கொரோனாவை தொடர்ந்து பரவும் ‘லாசா’-உயிரிழப்பு 70 ஆக உயர்ந்தது!

நைஜீரியாவில் லாசா காய்ச்சலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவில் தொடங்கி தற்போது உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்போர் தொகை அதிகரித்துள்ள நிலையில் தற்போது லாசா எனும் காய்ச்சலும் உலகை அச்சுறுத்திவருகிறது.

லாசா காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை 700 இல் இருந்து 1708 வரை உயர்ந்துள்ளதாக நைஜீரியா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மூன்று மாநிலங்களில் காய்ச்சல் பதிவாகியுள்ளது. இந்த காய்ச்சல் முதன்முதலில் ஜனவரி மாதத்தில் பதிவாகியதாகவும், அதன் பரவல் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அமர்நாத் குகைக் கோயிலுக்கான யாத்திரை ஆரம்பமாகிறது!

Fri Feb 14 , 2020
x அமர்நாத் குகைக் கோயிலில் தோன்றும் பனிலிங்கத்தை தரிசனம் செய்யும் இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை எதிர்வரும் ஜூன் 23ஆம் திகதி ஆரம்பமாகின்றது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் ஆளுநர் கிரீஷ் சந்திர […]

விழாக்கள்