“கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பாரோ” துடிக்க துடிக்க சுட்டுக்கொலை?

வட கொரியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என செய்தி வெளியாகி உள்ளது.

வட கொரியா நாட்டை சேர்ந்த வர்த்தக அதிகாரி ஒருவர் சமீபத்தில் சீனாவிற்கு சென்று நாடு திரும்பியுள்ளார்.

இதனால் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என வடகொரிய அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இதனையடுத்து, அதிகாரிகள் அவரை தனிமைப்படுத்தி தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தி இருந்தனர்.

இதற்கிடையில், அந்த நபர் அந்நாட்டின் பொது இடத்தில் உள்ள குளியல் அறைக்கு சென்றுள்ளார். இது குறித்து தகவலறிந்த பொலிஸார் அந்த நபரை கைது செய்தனர்.

மேலும், அவரிடம் இருந்து கொரோனா வைரஸ் பிறருக்கு பரவி விடும் என அதிகாரிகள் பயப்பட்டனர்.

இதையடுத்து, அவர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு உயர் அதிகாரிகளின் உத்தரவின் படி உடனடியாக துடிக்க துடிக்க சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கொழும்பில் தமிழ் மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தல்! ரவீந்திர குணரத்ன உட்பட இருவருக்கு வழங்கப்பட்ட அதிரடித் தீர்ப்பு!

Fri Feb 14 , 2020
x தமிழ் மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரின் கடத்தலுடன் தொடர்புடைய இரு அதிகாரிகளையும் விடுதலை செய்ய முடியாது என கோட்டை நீதிவான் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. கொழும்பு புறநகர்ப் பகுதியில், 2008, 2009 ஆம் […]

விழாக்கள்