சினிமாவை விட்டு விலகுவதா? – சமந்தா பதில்!

நடிப்பதில் இடைவெளி வரலாம் ஆனால், அதை சினிமாவை விட்டு விலகுகிறேன் என்று யாரும் கருதக்கூடாது என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

விஜய்சேதுபதி – திரிஷா நடித்த ’96’ படம் தெலுங்கில் ‘ஜானு’ என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது. இதில் விஜய் சேதுபதி வேடத்தில் சர்வானந்தும் திரிஷா கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடித்துள்ளனர்.

படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்ற நிலையில், சினிமாவைவிட்டு விலக சமந்தா முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இந்த விடயம் குறித்து சமந்தா விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது: ”3 வருடங்களுக்கு பின்னர் சினிமாவைவிட்டு விலகும் அர்த்தத்தில் நான் எதையும் பேசவில்லை. 10 வருடங்களுக்கு மேல் நடிகையாக சினிமாவில் நீடிப்பேன்.

திரையுலகம் சவால் நிறைந்தது. இங்கு நடிகைகள் தொடர்ந்து இருப்பது கஷ்டம். என்னால் நடிக்க முடியாவிட்டாலும் வேறு ஏதாவது ஒரு வகையில் சினிமாவுடன் தொடர்பில் இருப்பேன். தொடர்ந்து நடிப்பதில் கொஞ்சம் இடைவெளி வரலாம். அதை வைத்து சினிமாவை விட்டு விலகுகிறேன் என்று யாரும் கருதக்கூடாது” என சமந்தா மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

100 மாணவர்களை இலவசமாக விமானத்தில் அழைத்துச் செல்லும் சூர்யா!

Thu Feb 13 , 2020
x அரச பாடசாலையில் பயிலும் 100 மாணவர்களை இலவசமாக விமானத்தில் அழைத்துச் செல்ல ‘சூரரை போற்று’ படக்குழு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிவரும் […]

விழாக்கள்