வெளியுறவுத்துறை பணி மையத்துக்கு சுஷ்மா சுவராஜ் பெயரை சூட்டியது மத்திய அரசு!

தலைநகர் டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை பணி மையம் இனிமேல் ‘சுஷ்மா சுவராஜ் பணி மையம்’ என்று அழைக்கப்படவுள்ளதாக வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்னாள் அமைச்சர் சுஷ்மா சுவராஜின் சேவையை கௌரவிக்கும் விதமாக அவரது பிறந்தநாளை முன்னிட்டு வரும் பெப்ரவரி 14ஆம் திகதி முதல் பிரவாசி பாரதிய கேந்திரத்தின் பெயர் ‘சுஷ்மா பவன்’ என அழைக்கப்படும்.

இதேபோல், வெளியுறவுத்துறை பணி மையம் இனிமேல் ‘சுஷ்மா சுவராஜ் பணி மையம்’ என அழைக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய வெளியுறவுத் துறையின் முன்னாள் அமைச்சராகப் பதவி வகித்திருந்த சுஷ்மா சுவராஜ் கடந்த ஓகஸ்ற் மாதம் காலமானார். சுஷ்மா சுவராஜ் தனது பதவிக் காலத்தில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்குத் தேவைப்படும் உதவிகளை இந்திய தூதரகம் மூலம் விரைந்து செய்துவந்தார்.

இந்நிலையில் அவரை கௌரவிக்கும் முகமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கொரோனா வைரஸ் அபாயம்: ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவது குறித்து அறிவிப்பு!

Thu Feb 13 , 2020
x டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகள் எக்காரணம் கொண்டும் நிறுத்தப்படாது என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். சீனாவின் வுஹான் பகுதியில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் 25 இற்கும் மேற்பட்ட நாடுகளில் மிக வேகமாகப் பரவி […]

விழாக்கள்