இராஜாங்க அமைச்சரை நேரடியாக எதிர்த்த பெண் அரச அதிகாரி! பக்கபலமாக கோட்டாபயவும் மகிந்தவும்!

இயற்கை வளத்தை அழித்து சட்டவிரோத நிர்மாணப்பணிகள் மேற்கொள்வதற்கு எதிராக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த முன்னிலையில் தமது ஆதங்கத்தை வௌிப்படுத்திய அரச உத்தியோகத்தர் தேவானி ஜயதிலக்கவிற்கு பாதுகாப்பாக ஜனாதிபதியும், பிரதமரும் இருக்கின்றனர் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அண்மையில் மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் கலந்து கொண்ட தேவானி ஜயதிலக்க நீர்கொழும்பு தில்லையடி தீவகபகுதியில் அமையப்பெற்றுள்ள இயற்கை வளத்தை அழித்து சட்டவிரோத நிர்மாணப்பணிகள் மேற்கொள்வதற்கு எதிராக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த முன்னிலையில் தமது ஆதங்கத்தை வௌிப்படுத்தியிருந்தார்.

இதன்போது குறித்த பெண் அதிகாரி கருத்து வெளியிடுகையில், அரச காணிகளை பல்வேறு மனித செயற்பாடுகளுக்காக பயன்படுத்துவதன் மூலம் ஒக்ஸிஜனிற்கு பாதிப்பு ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த உத்தியோகத்தரின் செயல்பாடும் அவரின் தைரியமான பேச்சும் அங்கிருந்தவர்களுக்கு முன்மாதிரியாக இருந்ததாக குறிப்பிடப்படுகிறது. குறித்த பெண் உத்தியோகத்தர் தொடர்பில் பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் பந்துல குணவர்தன,

இயற்கை வளத்தை அழித்து சட்டவிரோத நிர்மாணப்பணிகள் மேற்கொள்வதற்கு எதிராக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த முன்னிலையில் தமது ஆதங்கத்தை வௌிப்படுத்திய அரச உத்தியோகத்தர் தேவானி ஜயதிலக்கவிற்கு பாதுகாப்பாக ஜனாதிபதியும், பிரதமரும் இருக்கின்றனர் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

உலகிலேயே அதிக வயதான மனிதர் இவர்தான்!

Thu Feb 13 , 2020
x உலகில் வாழ்ந்துக்கொண்டிருக்கும் அதிக வயதான மனிதர் என்று 112 வயதான ஜப்பானியர் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். 1907ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் திகதி பிறந்த சிட்டிசு வடனாபே என்பவரே உலகின் அதிக வயதான மனிதர் என்று […]

விழாக்கள்