ஸ்ரீலங்காவிற்குள் ரஷ்யாவின் பெரும் திட்டம்!

இலங்கையில் அணுசக்தி மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு நீண்டகால முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் யூரி மெட்டேரி தகவல் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர்,

இலங்கையில் அணு மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம். அதிகரித்து வரும் எரிசக்தித் தேவையைக் கருத்திற்கொண்டே ரஷ்யா இவ்வாறு ஆராய்ந்து வருகிறது.

இலங்கை அரசாங்கம் மாசற்ற எரிசக்திக்கு ஆதரவளிப்பதால் நீண்டகால நவடிக்கை ஊடாகவே இவ்வாறான திட்டம் நடைமுறைப்படுத்த சாத்தியமாகும். இலங்கையில் அணுசக்தி மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு நீண்டகால முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இரு அரசாங்களுக்கும் இடையிலான ஒற்றுமையையும், பொருளாதார வளர்ச்சியையும் கருத்திற்கொண்டு இலங்கையில் அணுமின் உற்பத்தி நிலையத்தை உருவாக்குதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

உலகில் கோரத் தாண்டம் ஆடப்போகிறது வைரஸ் ! உலக நாடுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை!

Thu Feb 13 , 2020
x கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் தொற்றுக்கு உள்ளானவர்களை ஒப்பிடும் போது ஒரே வீதம் போல் தெரிந்தாலும் அதனால் ஏற்படக் கூடிய நிலைமை மிகவும் பாரதூரமானது என ஹொங்கொங் அரச சுகாதார […]

விழாக்கள்