நான் சிரித்தால் – முதல்முறையாக இடம் மாறும் ஹிப்ஹாப் ஆதி! Check this out.

ஹிப் ஹாப் ஆதியின் நான் சிரித்தால் படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல தொலைக்காட்சி பெற்றுள்ளது.

மீசைய முறுக்கு, நட்பே துணை படங்களில் நடித்தவர் ஹிப் ஹாப் ஆதி. இவர் தற்போது நடித்துள்ள திரைப்படம் நான் சிரித்தால். அறிமுக இயக்குநர் இரானா இப்படத்தை இயக்கியுள்ளார். ஐஷ்வர்யா மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார். கே.எஸ்.ரவிகுமார், ரவி மரியா, முனிஸ்காந்த், ஷாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குநர் சுந்தர்.சி இப்படத்தை தயாரித்துள்ளார்.

இந்நிலையில் நான் சிரித்தால் படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜி தமிழ் தொலைக்காட்சி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. பிப்ரவரி 14 அன்று வெளியாகும் இப்படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை ஜி தமிழ் தொலைக்காட்சி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆதியின் முந்தைய படங்களான மீசைய முறுக்கு, நட்பே துணை ஆகிய படங்களின் சாட்டிலைட் உரிமையை சன் தொலைக்காட்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திரு வேலாயுதர் காசிநாதர்

Wed Feb 12 , 2020
x பிறப்பு 21 AUG 1944 திரு வேலாயுதர் காசிநாதர் ஓய்வுபெற்ற வயோதிபர் இல்ல பணியாளர் வயது 75 கைதடி கிழக்கு(பிறந்த இடம்) இறப்பு 11 FEB 2020         […]

விழாக்கள்