துப்பாக்கியால் சுடச் சொன்னவர்களை மக்கள் துடைப்பத்தால் அடித்துள்ளனர் – பிரகாஷ் ராஜ்!

துப்பாக்கியால் சுடச் சொன்னவர்களை மக்கள் துடைப்பத்தால் அடித்துள்ளனர் என டெல்லி தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த சனிக்கிழமை தேர்தல் நடைபெற்ற நிலையில், வாக்குகள் எண்ணும் பணி இன்று செவ்வாய்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, ஆம் ஆத்மி கட்சி சுமார் 58 இடங்களிலும், பாஜக 12 இடங்களிலும் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

இதனால் டெல்லியில் 3வது முறையாக கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மியின் ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக நடிகர் பிரகாஷ் ராஜ், தேர்தல் முடிவுகள் மூலமாக துப்பாக்கியால் சுடச் சொன்னவர்களை டெல்லி மக்கள் துடைப்பத்தால் அடித்துள்ளனர் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தொடரை வென்றது நியூஸிலாந்து: 31 வருடங்களுக்கு பிறகு இந்தியக் கிரிக்கெட் அணி வைட் வோஷ்!

Tue Feb 11 , 2020
x இந்தியா அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், நியூஸிலாந்து கிரிக்கெட் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, நியூஸிலாந்து அணி முழுமையாக கைப்பற்றியுள்ளது. […]

அதிகம் படித்தவை

விழாக்கள்