மூத்த ஒலிபரப்பாளர் எஸ்.கே.ராஜெனுக்கு கனடாவில் தமிழர் தகவல் விருது!

இலங்கைத்தீவிலும் புலம்பெயர் தேசங்களிலும் ஒலிபரப்புத்துறையில் நான்கு தசாப்தங்கள் சேவையாற்றிய மூத்த ஒலிபரப்பாளர் எஸ்.கே.ராஜெனுக்கு கனேடிய தமிழர் தகவல்இதழ் ஒலிபரப்புத்துறை ஆளுமையாளர் விருது வழங்கி மதிப்பளித்துள்ளது. கடந்த 9 ஆந்திகதி ஞாயிற்றுக்கிழமை கனடாவின் ரொறன்ரோ நகர மண்டபத்தில் இடம் விழாவில் ஏனைய விருதாளர்களுடன் எஸ்.கே.ராஜெனுக்கும் இந்த மதிப்பளிப்பு இடம்பெற்றது.

இலங்கையின் முதலாவது தனியார் வானொலிச்சேவைகள் எனத் தரப்படுத்தக்கூடிய வகையில், யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் ஒலித்த மணிக்குரல் மற்றும் பெஸ்ற்ரோன் சேவையில் தனது ஒலிபரப்புத்துறை வாழ்வை ஆரம்பித்தவர் எஸ்.கே.ராஜென.;

அதன் பின்னர் இலங்கை வானொலியிவ் அவர் இணைய முயற்சித்த வேளையில் இலங்கையின் இனமுரண்பாட்டு போர்மேகங்கள் சூழ்ந்ததையடுத்து இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்து பிரான்ஸில் வாழ்ந்தவர்.

புலம் பெயர்ந்தபோதும் எஸ்.கே.ராஜெனின் வானொலித்தாகம் அடங்காததால் தமிழமுதம் வானொலிநிகழ்ச்சியூடாக ஐரோப்பிய மண் வானலையில் அவரது தமிழ் ஒலித்தது.

லண்டனில் ஐ.பி.சி-தமிழ் வானொலி ஆரம்பிக்கப்பட்ட போதும் அதன் நிறுவனர் தாசீசியஸ் அவர்கள் அந்த வானொலியின் முதல் ஒலிபரப்பாளராக அழைக்கப்பட்டவர் எஸ். கே ராஜென் அன்றிலிருந்து இன்றுவரை வானொலித்துறையை, தன் நெஞ்சுக்கு நெருக்கமாக நேசித்து வருகிறார்.

ஈழத்துக் கலைஞர்களை கலை இலக்கியவாதிகளை முன்னிலைப்படுத்தியே தனது வானொலி தொலைக் காட்சி நிகழ்ச்சிகளை வடிவமைப்பார்.

அதுபோல ஜரோப்பிய அரங்குகளில் எராளமான நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தொகுத்து வழங்கி அவரது கலைப்பயணங்கள் ஐரோப்பிய நாடுகளெங்கும் பல ஆண்டுகள் தொடர்கின்றன.

இவ்வாறான ஆளுமையாளரான எஸ்.கே. ராஜெனுக்குகனேடிய மண்ணில் கடந்த 29 ஆண்டுகளாக வெற்றிகரமாக வெளிவரும் தமிழர் தகவல் இதழ் தனது ஆண்டு விழாக்களில், தகுதியுள்ள கலையிலக்கிய ஊடக>மற்றும் வர்த்தகத்துறை ஆளுமைகளைத் தெரிவு செய்து ஆண்டுதோறும் விருதுகள் வழங்கும் நீட்சி தடத்தில் இந்த ஆண்டு ஒலிபரப்புத்துறை ஆளுமையாளர் விருது வழங்கி மதிப்பளித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கொரோனா வைரஸை ஒழித்துக் கட்ட நித்தியானந்தா கூறும் எளிய வழி இதோ!

Tue Feb 11 , 2020
x கொரோனாவை ஒழிக்க நித்தியானந்தா காணொளியில் எளிய வழி ஒன்றை கூறியுள்ளார்.கொரோனா வைரஸால் சீனாவில் மட்டுமே இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் 25க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது.கொரோனா வைரஸை கட்டுப்படுத்த […]

விழாக்கள்