இலங்கையின் முக்கிய பகுதி ஒன்றுக்குச் செல்ல விதிக்கப்பட்டது தடை உத்தரவு!

இலங்கையின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றான கண்டி – ஹந்தான மலைக்குன்றில் தீ பரவக்கூடிய பகுதிகளுக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஹந்தான மலைக்குன்றில் ஒரு வாரமாக இடைக்கிடையே சில பகுதிகளில் தீ பரவியதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மலைக்குன்றில் பரவிய தீ இன்று காலை கட்டுப்படுத்தப்பட்டதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் ஜானக ஹதுன்பதிராஜா தெரிவித்தார்.

இதேவேளை மலைக்குன்றுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் நடவடிக்கையால் தீ பரவல் சம்பவங்கள் பதிவாவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதையடுத்தே சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஹந்தான மலைக்குன்றில் பரவிய தீ காரணமாக சுமார் 60 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கொரோனா தொடர்பில் தினம் தினம் வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்! அதிர வைக்கும் பின்னணி!

Tue Feb 11 , 2020
x கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக சீனாவில் இருந்து தப்பியோடிய பிரபல தொழில் அதிபர் குயோ வெங்குயி தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் கொரோனா […]

விழாக்கள்