“இதனால் விஜய்க்கு வளர்ச்சி தான்” : ஐடி ரெய்டு.. அர்ஜுன் சம்பத்.. ரஜினி – பிரபல இயக்குநர் அதிரடி

நடிகர் விஜய்யிடம் நடந்த ஐடி ரெய்டு குறித்து இயக்குநர் அமீர் கருத்து தெரிவித்துள்ளார்.

மௌனம் பேசியதே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அமீர். இதையடுத்து ராம், பருத்திவீரன் உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் இடம் பிடித்தார். திரைப்படங்கள் மட்டுமின்றி, சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்கு அமீர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமீர் நடிகர் விஜய்யிடம் நடந்த ஐடி ரெய்டு, அர்ஜுன் சம்பத், நடிகர் ரஜினியின் கருத்து ஆகியவற்றை பற்றி பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ‘நடிகர் விஜய் குறித்து அர்ஜு சம்பத் அவதூறாக பேசி வருவது கண்டிக்கதக்கது. விஜய் சமூகத்தில் ஒரு நல்ல அந்தஸ்தில் இருப்பவர், அவரை பற்றி கொச்சையாக பேச அர்ஜுன் சம்பத்துக்கு என்ன உரிமை இருக்கிறது.

அவர் வரி எய்ப்பு செய்திருந்தால் அதை வருமான வரித்துறை பார்த்துக்கொள்ளும், தனிப்பட்ட முறையில் விஜய்யை பற்றி அவதூறான வார்த்தைகளை அர்ஜுன் சம்பத் பயன்படுத்துவது வண்மையாக கண்டிக்கத்தக்கது. மேலும் விஜய்யை அச்சுறுத்தி பார்க்கவே இப்படியான ரெய்டுகள் எல்லாம் நடத்தப்படுகிறது. இது போன்ற அச்சுறுத்தல்களால் விஜய்க்கு வளர்ச்சி தான்.

மேலும் படப்பிடிப்பின் போது போராட்டம் நடத்தியது தவறானது. அந்த இடத்தில் விஜய் மிகவும் முதிர்ச்சியுடன் நடந்து கொண்டார். ஒரு திரைப்பட நடிகர் அரசியல் பேச கூடாது என்று நம் ஜனநாயகத்தில் இல்லை’ என கூறினார்.

மேலும் நடிகர் ரஜினிகாந்த் குறித்து பேசிய அமீர், ’40 ஆண்டு காலமாக சினிமாவில் இருக்கும் ரஜினி, குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவாக பேசியிருப்பது வருத்தமாக இருக்கிறது. மாணவர்கள் எப்போதும் சுய சிந்தனை உள்ளவர்கள். இன்றைய தமிழக அரசியலில் இருக்கும் பலரும் மாணவர்களாக இருந்து போராட்டங்கள் செய்து வந்தவர்கள் தான்.

இன்று இருக்கும் மாணவர்கள் தெளிவான அரசியல் சிந்தனையுடன் இருக்கிறார்கள். எனவே மாணவர்கள் விவகாரத்தில் ரஜினி பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என அமீர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மகேஷ் பாபு குறித்து அவரது மனைவி பழைய ஃபோட்டோவை பகிர்ந்து நெகிழ்ச்சி!

Mon Feb 10 , 2020
x மகேஷ் பாபு நடிப்பில் சமீபத்தில் பொங்கல் மற்றும் சங்கராந்தி பண்டிகைகளை முன்னிட்டு வெளியான ‘சரிலேரு நீக்கெவ்வரு’ படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். […]

விழாக்கள்