Home India - இந்தியா செய்திகள் தி.மு.க. நடத்தும் கையெழுத்து இயக்கம், இந்திய இறையாண்மைக்கு எதிரானது – ராதாரவி

தி.மு.க. நடத்தும் கையெழுத்து இயக்கம், இந்திய இறையாண்மைக்கு எதிரானது – ராதாரவி

53
0

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தி.மு.க. நடத்தும் கையெழுத்து இயக்கம், இந்திய இறையாண்மைக்கு எதிரானது என நடிகர் ராதாரவி சாடியுள்ளார்.

சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்ற, பா.ஜ.க. முப்பெரும் விழா பொதுக் கூட்டத்தில், கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தில், பாரதியாருக்கு மிகப்பெரிய சிலை அமைக்க வேண்டும் என தெரிவித்தார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து, நடிகர் ரஜினி சரியான கருத்துகளை பேசி வருவதாக கூறிய அவர், தி.மு.க. நடத்தும் கையெழுத்து இயக்கம், நாட்டுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் எனவும் விமர்சித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here