தமிழகத்தில் மிகப் பெரிய திட்டங்களை முன்னெடுக்க ஆசிய வங்கி கடனுதவி!

தமிழகத்தில் 4 பெரிய திட்டங்களை முன்னெடுப்பதற்கு நடப்பாண்டில் 10 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க ஆசிய உட்கட்டமைப்பு முதலீடு வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி காவிரி பாசன கட்டமைப்புகளை மேம்படுத்தல், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் நிரந்தர வெள்ள தடுப்பு திட்டம், சென்னையில் சுற்றுவட்ட சாலை இரண்டாவது, மூன்றாவது கட்டடம், சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை 15 புள்ளி 3 கிலோ மீட்டர் தூரம் மெட்ரோ ரயில் நீட்டிப்பு உள்ளிட்ட திட்டங்களுக்காக ஆசிய முதலீடு வங்கியிடம் கடனுதவி கேட்டு அறிக்கையொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன்கீழ் குறித்த திட்டத்திற்கு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகின்றது. இதில் முதல் கட்டமாக 10 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க ஆசிய வங்கி மற்றும் தமிழக அரசு சார்பிலும் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தி.மு.க. நடத்தும் கையெழுத்து இயக்கம், இந்திய இறையாண்மைக்கு எதிரானது – ராதாரவி

Mon Feb 10 , 2020
x குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தி.மு.க. நடத்தும் கையெழுத்து இயக்கம், இந்திய இறையாண்மைக்கு எதிரானது என நடிகர் ராதாரவி சாடியுள்ளார். சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்ற, பா.ஜ.க. முப்பெரும் விழா பொதுக் கூட்டத்தில், கலந்துகொண்டு […]

விழாக்கள்