கொரோனா வைரஸின் தீவிரம்: சீன ஜனாதிபதிக்கு பிரதமர் மோடி கடிதம்!

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து விடுபடுவதற்காக சீனாவிற்கு உதவிகளைச் செய்யத் தயாராக இருப்பதாக பிரதமர் மோடி சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

பிரதமர் அனுப்பியுள்ள கடிதத்தில், “சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கும் சூழலில் ஜனாதிபதிக்கு இந்தியா துணையாக இருக்கும். மேலும், சீனா சந்திக்கும் சவால்களுக்கு உதவ இந்தியா தேவையான உதவிகளை வழங்கத் தயாராக இருக்கிறது.

இதேவேளை, இதுவரை உயிரிழந்த மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். சீனாவில் இருந்த 650 இந்தியர்களை ஹூபே மாநிலத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்ற உதவிய சீன ஜனாதிபதிக்கு நன்றிகளைத் தெரிவிக்கிறேன்” என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸுக்கு இதுவரை அங்கு 800இற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 25 நாடுகளுக்கும் மேலாக அந்த வைரஸால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு சீனாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்ற நிலையில் உயிரிழப்புக்களும் வைரஸ் தொற்றுக்கு ஆளாகுபவர்களும் அதிகரித்துக்கொண்டே வருகின்றனர்.

இந்தச் சூழலில் சீனாவில் தங்கிப் பயின்று வந்த 634 இந்தியர்கள் கடந்த வாரம் 2 எயார் இந்தியா விமானங்கள் மூலம் மீட்கப்பட்டு இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்டனர். இதற்குச் சீன தூதரகம், அதிகாரிகள் இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

புஷ்ஃபையர் கிரிக்கெட் பாஷ் போட்டி: ரிக்கி பொண்டிங் அணி மயிரிழையில் வெற்றி!

Sun Feb 9 , 2020
x புஷ்ஃபையர் கிரிக்கெட் பாஷ் கண்காட்சிப் போட்டியில் ரிக்கி பொண்டிங் தலைமையிலான அணி கில்கிறிஸ்ட் லெவன் அணியை ஒரு ஓட்டத்தால் வீழ்த்தியுள்ளது. அவுஸ்ரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் ஏராளமான இழப்புகள் ஏற்பட்டன. அதற்கு நிவாரணம் திரட்ட […]

விழாக்கள்