சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வாகனங்களை அழிக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்?

பழைய மற்றும் சுற்றுச்சூழலுக்கு  மாசு ஏற்படுத்தும் வாகனங்களை அழிப்பது தொடர்பான கொள்கை விரைவில் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பழைய வாகனங்களை அழிக்கும் மையங்களை அமைத்து செயற்படுத்துவதற்கான விதிமுறைகள் தொடர்பான வரைவுக் கொள்கைக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல் அளித்து,  மத்திய அமைச்சரவைச் செயலகத்துக்கு அனுப்பி வைத்துள்ளது.

பதிவு எண்களை புதுப்பிக்காத வாகனங்கள்,  பறிமுதல் செய்யப்பட்ட மற்றும் கைவிடப்பட்ட வாகனங்களையும் அழித்தல் தொடர்பான பரிந்துரைகளும் இதில் இடம் பெற்றுள்ளன.

மத்திய அரசின் நீண்டகாலத் திட்டமான இந்த கொள்கைக்கு  மத்திய அமைச்சரவை விரைவில் ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கொரோனா வைரஸின் தீவிரம்: சீன ஜனாதிபதிக்கு பிரதமர் மோடி கடிதம்!

Sun Feb 9 , 2020
x கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து விடுபடுவதற்காக சீனாவிற்கு உதவிகளைச் செய்யத் தயாராக இருப்பதாக பிரதமர் மோடி சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கு கடிதம் அனுப்பியுள்ளார். பிரதமர் அனுப்பியுள்ள கடிதத்தில், “சீனாவில் கொரோனா வைரஸ் […]

விழாக்கள்