உருவாகிறது ‘ஏவுகணை நாயகன் அப்துல் கலாம்’ திரைப்படம்: ஃபெர்ஸ்ட் லுக் வெளியானது!

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் குறித்த வாழ்க்கை வரலாற்றின் ஃபெர்ஸ்ட் லுக் போஸ்டரை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டடுள்ளார்.

இந்தப் படத்தின் ஃபெர்ஸ்ட் லுக் போஸ்டரை டெல்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அமைச்சர், வெளியிட்டு வைத்ததன் பின்னர் தனது ருவிற்றர் பக்கத்தில் குறித்த நிகழ்வின் படங்களை வெளியிட்டு கருத்துக் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், “இந்தியாவின் சின்னமான மக்கள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றின் ஃபெஸ்ர்ட் லுக் போஸ்டர் புதுடில்லியில் இன்று வெளியிடப்பட்டது.

Hollywood மற்றும் தெலுங்கு திரைப்படத்துறை இணைந்து தயாரிக்கும் ‘APJ Abdul Kalam: The Missile Man’ (ஏ.பி.ஜே. அப்துல் கலாம்: தி ஏவுகணை நாயகன்) என்ற இந்தப் படம் இவ்வாண்டு இறுதியில் வெளியாகவுள்ளது.

இத்திரைப்படத்தில் பிரபல தென்னிந்திய நடிகர் அலி முன்னாள் குடியரசுத் தலைவரின் பாத்திரத்தை ஏற்று நடிக்கிறார். இப்படத்தை ஜகதீஷ் தானேட்டி, சுவர்ணா பப்பு மற்றும் மார்டினி பிலிம்ஸ் நிறுவனத்தின் ஜானி மார்டின் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

இதுமட்டுமின்றி, ‘சத்ரபதி சிவாஜி மகாராஜ்’ மற்றும் ‘முதல் இந்திய சுதந்திரப் போர்’ குறித்த திரைப்படங்கள் உள்ளிட்ட 5 திரைப்படத் தயாரிப்புகளை அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மார்டினி பிலிம்ஸ் மற்றும் பிங்க் ஜாகுவார்ஸ் என்டர்ரெயின்மென்ற் என்பன இணைந்து தயாரிக்கவுள்ளன. இதற்காக அவர்கள் 1 பில்லியனுக்கும் அதிகமாக முதலீடு செய்கிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில், பத்மாவதி, தானாஜி, தி யூசங் வாரியர், மகாநடி, தி ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர், தாக்கரே போன்ற வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படங்கள் தொடர்ந்து மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுவருகின்றன. தற்போது முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றிய இரண்டுக்கும் மேற்பட்ட படங்கள் தயாரிக்கப்படும் செய்திகளும் வந்துகொண்டிருக்கிறன.

இவ்வரிசையில் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் தயாரிக்கப்பட்டு வருவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வாகனங்களை அழிக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்?

Sun Feb 9 , 2020
x பழைய மற்றும் சுற்றுச்சூழலுக்கு  மாசு ஏற்படுத்தும் வாகனங்களை அழிப்பது தொடர்பான கொள்கை விரைவில் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பழைய வாகனங்களை அழிக்கும் மையங்களை அமைத்து செயற்படுத்துவதற்கான விதிமுறைகள் தொடர்பான […]

விழாக்கள்