கொரோனா வைரஸ் : பாகிஸ்தான் மாணவர்களை மீட்க இந்தியா நடவடிக்கை!

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான சீனாவின் வூஹான் நகரில் சிக்கியுள்ள பாகிஸ்தான் மாணவர்களை மனிதநேயத்தின் அடிப்படையில் மீட்க தயாராக உள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.

இது குறித்து பிரதமர் நரேந்திரமோடி சார்பில்  வெளியுறவு அமைச்சகம் மூலம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் தெரிவிக்கப்பட்டது.  இருப்பினும் பாகிஸ்தான் அரசு இதற்கு எவ்வித பதிலும் வழங்காத நிலையில், குறித்த முயற்சி கைகூடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில்,  வூஹான் நகரில் ஏராளமான பாகிஸ்தான் மாணவர்களும் தங்கியிருந்தனர். மனிதநேய அடிப்படையில்  அவர்களை மீட்டு வருகிறோம் என பிரதமர் மோடியின் அறிவுரைப்படி நமது வெளியுறவு அமைச்சகம் சார்பில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

ஆனால் இம்ரான் கானிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.  இதனால்  பாகிஸ்தான் மாணவர்களை அழைத்து வர முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளன.

கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு நாட்டினர் சீனாவில் இருந்து வெளியேறிவரும் நிலையில்,  தங்களது நாட்டு மாணவர்களை மீட்க போவதில்லை என பாகிஸ்தான் அரசு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

உக்ரேனிய விமானம் சுட்டுவீழ்த்திய விவகாரம்: ஈரானிடம் ஒரு பில்லியன் டொலர் கோருகிறது கனடா!

Sat Feb 8 , 2020
x உக்ரேனிய விமானம் 176 பயணிகளுடன் சுட்டுவீழ்த்தப்பட்ட விவகாரத்தில் ஈரானிடம் 1 பில்லியன் டொலர் இழப்பீடு கோருவதற்கு கனடா திட்டமிட்டுள்ளது. உக்ரேனிய விமானத்தின் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக கனேடிய வழக்கறிஞர்கள் தெஹ்ரான் மீது ஒரு வர்க்க […]

விழாக்கள்