ஏயார் இந்தியா விவகாரம் : மத்திய அரசு மீது குற்றச்சாட்டு!

ஜனாதிபதி  துணை ஜனாதிபதி  பிரதமர் ஆகிய மிக முக்கிய பிரமுகர்கள் பயன்பாட்டுக்கு தனி விமானங்கள் வழங்கப்பட்டமைக்காக மத்திய அரசிடம் இருந்து 822 கோடி ரூபாய் வரவேண்டியுள்ளதாக ஏயார் இந்தியா கூறியுள்ளது.

ஏயார் இந்தியாவின் ஓய்வு பெற்ற அதிகாரியான லோகேஷ் பத்ரா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டப்படி மனு அளித்திருந்தார். அதற்கு ஏர் இந்தியா பதில் அளித்துள்ளது.

அரசு அதிகாரிகள் கடனுக்கு விமான பற்றுச்சீட்டுக்களை பெற்றவகையில் 526 கோடி ரூபாயும்,  மீட்புப்பணிக்கு 9 கோடியே 67 இலட்சம் ரூபாயும், வெளிநாட்டு பிரதிநிதிகளை அழைத்து வந்தமைக்காக  12 கோடியே 65 இலட்சம் ரூபாய் வரவேண்டி இருப்பதாகவும் ஏயார் இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை பொதுத்துறை விமான நிறுவனமான ஏயார் இந்தியாவை விற்பனை செய்ய  மத்திய அரசு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கொரோனா வைரஸ் தடுப்புக்கான முகமூடிகளுக்குத் தட்டுப்பாடு: உலக சுகாதார அமைப்பு

Fri Feb 7 , 2020
x உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பரவலில் இருந்து காத்துக்கொள்ளும் Antivirus Mask எனப்படும் வைரஸ் தடுப்பு முகமூடி உற்பத்தி போதுமான அளவுக்கு இல்லையென உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. தலைவர் தெரிவித்தார். இதுகுறித்து […]

விழாக்கள்