கொரோனாவுடன் போராடும் நிலையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

கடந்த இரண்டு தினங்களாகவே சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது வீழ்ச்சி கண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

அவுன்ஸூக்கு நேற்று 1594.50 டொலராக அதிகபட்சமாக சென்ற நிலையில், இன்று குறைந்தபட்சம் 1574.80 டொலர்களாகவும் இருந்துள்ளது.

எனினும் தற்போது இது 1575.95 டொலர்களாக வர்த்தகமாகி வருகிறது.

கடந்த வாரம் உலக சுகாதார அமைப்பு கொரோனாவின் தாக்கத்தை அவசர நிலை பிரகடனமாக அறிவித்தது.ஏற்கனவே சீனாவிற்கு பல நாடுகளின் விமான போக்குவரத்து தடை செய்துள்ள நிலையில், சீனாவிலுள்ள முக்கிய பல கார்ப்பரேட் நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு வருகின்றன.

இதனால் பொருளாதாரம் பாதிகப்படும் என்ற நிலையில், கொரோனா வைரஸூடன் போராடும் இந்த நிறுவனங்களுக்கு பணம் மற்றும் கடன் ஆதரவு வழங்குவதாக சீனா அரசு உறுதியளித்துள்ளது.

சீனாவின் இத்தகைய நடவடிக்கையால் பெரிய அளவிலான பொருளாதார வீழ்ச்சி தடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தங்கம் விலை சரிய ஆரம்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

முன்னாள் முதல்வர்களை தடுத்து வைத்திருப்பது ஜனநாயகமா? – பிரியங்கா கேள்வி!

Wed Feb 5 , 2020
x ஜம்மு காஷ்மீரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர்களை இன்னும் விடுவிக்காததால் இது ஜனநாயகமா என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா கேள்வி எழுப்பியுள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய, 370 சட்டப்பிரிவை […]

விழாக்கள்