அமெரிக்கா – தெஹ்ரான் பதற்றங்களுக்கு மத்தியில் ஈரானுக்கு செல்ல விரும்புவதாக இளவரசர் சார்ள்ஸ் அறிவிப்பு!

பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ், ஈரானுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

பிரித்தானிய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் பல நூற்றாண்டுகளாக உலகின் ஒரு முக்கியமான பகுதியாக இருந்து வருவதையும், மனித அறிவு, கலாச்சாரம், கவிதை, கலை ஆகியவற்றிற்கு இவ்வளவு பங்களிப்பு செய்ததையும் நான் அறிவேன் என இளவரசர் சார்ள்ஸ் கூறியுள்ளார்.

தெஹ்ரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் இளவரசர் சார்லஸ் ஈரானுக்கு விஜயம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

இதேவேளை ஹரி மற்றும் மேகன் ஆகியோர் அரச குடும்பத்தில் இருந்து விலகியதை அடுத்து பிரித்தானிய முடியாட்சியில் ஏற்பட்ட பதற்றங்கள் தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கவில்லை.

இந்த மாதம் ஈரானின் இராணுவ உயர் அதிகாரி மீதான தாக்குதலை அடுத்து அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் வெடித்தது, அதே நேரத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நசானின் ஜாகரி-ராட்க்ளிஃப் மற்றும் சிலரை விடுவிக்குமாறு ஈரானுக்கு பிரித்தானியா அழைப்பு விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நியூஸிலாந்து அணியை பந்தாடும் இந்தியா: அடுத்த போட்டியிலும் வெற்றி!

Sun Jan 26 , 2020
x நியூஸிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணியானது நியூஸிலாந்துடன் 5 இருபதுக்கு-20, […]

விழாக்கள்