தொழிற்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் உறுப்பினர்களின் எண்ணிக்கையை தொழிற்கட்சி அதிகரித்துள்ளது.

தொழிற்கட்சியின் தலைமைக்கான போட்டியில் வரும் பெப்ரவரி 21ஆம் திகதி முதல் உறுப்பினர்கள் வாக்களிக்கவுள்ள நிலையில் மத்தியில் உள்ளூர் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தொகுதி தொழிலாளர் கட்சிகள் (CLP) தெரிவித்துள்ளன.

இதன்படி, மேற்கு லண்டன், ஹமர்ஸ்மித் பகுதியில் (Hammersmith) CLP-யில் 413 பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். இது உறுப்பினர் எண்ணிக்கையில் 32% அதிகரிப்பாகும். அதேநேரத்தில் பர்ரி வடக்கில்  (Bury North) 202 பேர் இணைந்துள்ளதுடன் இது 26% அதிகரிப்பாகும்.

மேலும், ரிச்மண்ட், தென்மேற்கு லண்டன் ஆகிய பகுதிகளில் 350 புதிய உறுப்பினர்கள் இணைந்துள்ள நிலையில் 30% உயர்ந்துள்ளது. கிழக்கு சசெக்ஸின் ஹோவ்-இல் 477 பேர் இணைந்துள்ளனர். இது 21% அதிகரிப்பாகும். இதேவேளை, எக்ஸிடரில் 300 கூடுதல் உறுப்பினர்களுடன் 25% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இவை குறுகிய காலத்தில் ஏற்பட்ட பெரிய அதிகரிப்பு என்பதுடன் குறித்த உறுப்பினர்கள் தொழிற்கட்சியின் தலைமையைத் தெரிவுசெய்வதற்கு வாக்களிப்பதற்காக மட்டுமே இணைந்திருக்கிறார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை. எனினும் உறுப்பினர்களின் இணைவு தொழிற்கட்சியின் நிதி நிலையை உயர்த்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பங்களாதேஷ் அணிக்கெதிரான ரி-20 தொடரில் பாகிஸ்தான் அணிக்கு முதல் வெற்றி!

Sat Jan 25 , 2020
x பங்களாதேஷ் அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், 1-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி முன்னிலைப் […]

விழாக்கள்