விற்பனைப் பொருட்களில் இருந்து பிளாஸ்ரிக்கை அகற்றுகிறது ரெஸ்கோ!

ரெஸ்கோ பல்பொருள் அங்காடி நிறுவனம் அதன் விற்பனைப் பொருட்களில் இருந்து பிளாஸ்ரிக் பயன்பட்டை அகற்றி கழிவுகளைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்த நடவடிக்கை மூலம் ஆண்டுக்கு 350 ரொன் பிளாஸ்ரிக்கை சுற்றுச்சூழலில் இருந்து அகற்றலாம் என்று ரெஸ்கோ பல்பொருள் அங்காடி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவின் மிகப்பெரிய பல்பொருள் அங்காடியான ரெஸ்கோ நிறுவனம், ஹெய்ன்ஸ் மற்றும் கிரீன் ஜயன்ற் போன்றவற்றுடன் இணைந்து பொருட்களை பொதிசெய்வதற்குப் பயன்படுத்தப்படும் பிளாஸ்ரிக்கை அகற்ற ஒப்பந்தங்களை மேற்கொள்கின்றது.

மாற்றங்கள் மார்ச் 2 ஆம் திகதி தொடங்கும் என்று தெரிவித்துள்ள ரெஸ்கோ, பிளாஸ்ரிக்கினால் சுற்றப்பட்டு பொதிசெய்யப்பட்ட பொருட்தொகுதிகளுக்கான கொள்வனவு நிறுத்தப்படும் என்று கூறியுள்ளது.

ரெஸ்கோ வாடிக்கையாளர்களில் 40% க்கும் அதிகமானோர் தகரத்தில் அடைக்கப்பட்ட பொருட்தொகுதிகளை வாங்குகின்றனர். வேகவைத்த பீன்ஸ், ரியூனா, தக்காளி மற்றும் சூப் ஆகிய தகரத்தில் அடைக்கப்பட்ட பொருட்தொகுதிகள் அன்றாடம் வாங்கப்படும் மளிகைப் பொருட்களில் அடங்கின்றன.

தேவையற்ற மற்றும் மீள்சுழற்சி செய்ய முடியாத அனைத்து பிளாஸ்ரிக்கினையும் நாம் அகற்றி வருகிறோம் என்று ரெஸ்கோ நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டேவ் லூவிஸ் தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழல் அவதானிப்புக் குழுவான கிரீன்பீஸ் அமைப்பு பிளாஸ்ரிக்கை அகற்றுவதற்கான ரெஸ்கோவின் முடிவை வரவேற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தொழிற்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!

Sat Jan 25 , 2020
x பொதுத் தேர்தலுக்குப் பின்னர் உறுப்பினர்களின் எண்ணிக்கையை தொழிற்கட்சி அதிகரித்துள்ளது. தொழிற்கட்சியின் தலைமைக்கான போட்டியில் வரும் பெப்ரவரி 21ஆம் திகதி முதல் உறுப்பினர்கள் வாக்களிக்கவுள்ள நிலையில் மத்தியில் உள்ளூர் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தொகுதி […]

விழாக்கள்