அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ்: ஆண்களுக்கான மூன்றாவது சுற்றுப் போட்டிகளின் முடிவுகள்!

ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர், தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது.

ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்றுவரும் இத்தொடரில் தற்போது மூன்றாவது சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

சரி தற்போது மூன்றாவது சுற்றின் சில முக்கியமான போட்டிகளின் முடிவுகளை பார்க்கலாம்,

ஆண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றுப் போட்டியொன்றில், ஆர்ஜெண்டீனாவின் டியாகோ ஸ்வார்ட்ஸ்மேனும், செர்பியாவின் டுசன் லாஜோவிக்கும் மோதினர்.

இரசிகர்களின் கரகோஷத்திற்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், டியாகோ ஸ்வார்ட்ஸ்மேன் 6-2, 6-3, 7-6 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று நான்காவது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றுப் போட்டியொன்றில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும், ஜப்பானின் யோஷிஹிடோ நிஷியோகாவும்  மோதினர்.

இரசிகர்களுக்கு உச்ச விறுவிறுப்பை பரிசளித்த இப்போட்டியில், நோவக் ஜோகோவிச், 6-3, 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றுப் போட்டியொன்றில், குரோஷியாவின் மரின் சிலிக்கும், ஸ்பெயினின் ரோபர்டோ பாடிஸ்டா அகுட்டும் பலப்பரீட்சை நடத்தினர்.

விறுவிறுப்பாக நகர்ந்த இப்போட்டியில், 6-7, 6-4, 6-0, 5-7, 6-3 என்ற செட் கணக்குகளில் மரின் சிலிக் வெற்றிபெற்று நான்காவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நடிகை சினேகா-பிரசன்னா ஜோடிக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. மகிழ்ச்சியாக பதிவிட்ட பிரசன்னா!

Fri Jan 24 , 2020
x தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடி நடிகை சினேகா மற்றும் பிரசன்னா. அவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில் தற்போது இந்த ஜோடிக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. பெண் குழந்தை பிறந்துள்ளதாக பிரசன்னா ட்விட்டரில் […]

விழாக்கள்