சீனாவை அச்சுறுத்தும் கொரோனா! தொடர்ச்சியாக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

சீனாவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீன சுகாதாரத் துறை அதிகாரிகளினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக ஆய்வு மேற்கொண்ட போது, அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தமை கண்டறிப்பட்டது.

‘நிமோனியா’ என்ற நுரையீரல் தொற்றினை இந்த வைரஸ் உருவாக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. முறையாக சிகிச்சை பெறாவிட்டால், பாதிப்புக்கு உள்ளானவர்கள் உயிரிழக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஆறு பேர் உயிரிந்துள்ளதுடன் 350 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சீனாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட ஒருவர் அமெரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சீனாவிலிருந்து கடந்த 15ஆம் திகதி அமெரிக்காவிற்குச் சென்ற ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

உலகை அச்சுறுத்தும் வைரஸ்! எதிர்ப்பு மருந்தினை கண்டுபிடிப்பதில் திணறும் மருத்துவர்கள்!

Wed Jan 22 , 2020
x கொரோனா வைரஸ்ஸை தடுப்பதற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்க குறைந்தது 6 மாதங்களாவது ஆகும் என ரஷ்யா நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசினால் இதுவரை சீனாவில் 9 பேர் […]

விழாக்கள்