செல்வன் குணநாதன் கெவின்

பிறப்பு
19 JAN 2007

செல்வன் குணநாதன் கெவின்

 

இறப்பு
17 JAN 2020

 

 

 

 

 

சுவிஸ் kanton Aargau Niederlenz ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட குணநாதன் கெவின் அவர்கள் 17-01-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், குணநாதன்(வின்சன்) சிவமலர் தம்பதிகளின் ஏக புதல்வனும்,

அஸ்வினா, காலஞ்சென்ற அஸ்வினி ஆகியோரின் அருமைச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

ஞானத்தின் பிள்ளை பாசத்தின் எல்லை
வானத்தைப் போலே வளா்கின்ற நேசம்
கானத்தைப் போலே நீ பேசும் வாா்த்தை
எம்காதில் நின்றே ஒலிக்குமே என்றும்!…

கேட்கின்ற தேவை புரியாமல் நாங்கள்
தவறாகச் சேவை செய்ததை எண்ணி
பலநேரம் மனதுள் பலமாக நோவோம்!…
உளமார உன்னை மன்னிப்புக் கேட்டோம்!…

குறும்பான வாழ்க்கை எமக்காகத் தந்தாய்
அரும்பான பிள்ளை அழகோடு நின்றாய்
பதின்மூன்றை நாளை தொடுகின்ற வேளை
காலன்கைப் பிள்ளை என்றாகிப் போனாய்!…

தொடா்ந்திங்கு வாழ்ந்து எமக்கிங்கு தொல்லை
தரவிரும் பாமல்த் தானோநீ சென்றாய்!…
உனைத்தாங்கி வாழ்தல் எமக்கான பேறு
என்றெல்லோ நாங்கள் சுமைதாங்கி ஆனோம்!…

அக்காவைத் தேடிச் சோ்ந்திடத் தானோ
அவசரம் காட்டிச் சென்று சோ்ந்திட்டாய்!…
துக்கங்கள் கூடித் துவண்டிடும் எங்கள்
மனதினை எண்ணிப் பாா்த்திருப் பாயோ!…

மனதினுள் உந்தன் நினைவுகள் சுமந்து
காலமெலாம் நாம் வாழ்ந்திருப்போமே!…
உந்தனின் ஆத்மா சாந்தியே கொள்ள
உண்மையின் உறவுகள் தொழுதிருப் போமே!…


Address: Get DirectionZwingsteinweg 2, 5702 Niederlenz, Switzerland

பார்வைக்கு

Monday, 20 Jan 2020 8:00 AM – 9:00 PM
Tuesday, 21 Jan 2020 8:00 AM – 12:00 PM
Zwingsteinweg 2, 5702 Niederlenz, Switzerland

கிரியை

Tuesday, 21 Jan 2020 2:00 PM – 3:00 PM
Ref Kirche Niederlenz
Höhenweg 10, 5702 Niederlenz, Switzerland

நல்லடக்கம்

Tuesday, 21 Jan 2020 3:00 PM – 4:00 PM
Ref Kirche Niederlenz
Höhenweg 10, 5702 Niederlenz, Switzerland

தொடர்புகளுக்கு

 

குணநாதன்(வின்சன்) – தந்தை Mobile : +41764297347
குமார் Mobile : +41763351078
கோகுலநாதன்(கோகுலன்) – பெரியப்பா Mobile : Mobile : +41792464900

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தமிழுக்குத் தடை இல்லை! ஸ்ரீலங்கா அமைச்சர் உறுதி!

Tue Jan 21 , 2020
x தமிழில் தேசிய கீதம் பாடக் கூடாது என உத்தியோகபூர்வமாக எதிலும் குறிப்பிடப்படவில்லை என தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் தினைக்களத்தில் இன்று செய்தியாளர்களைச் […]

விழாக்கள்