Home Cooking -சமையல் குறிப்புகள் சுவையான முட்டைகுழம்பு !

சுவையான முட்டைகுழம்பு !

59
0

பரிமாறும் அளவு – 2 நபருக்கு
தேவையான பொருள்கள் –
  1. முட்டை – 2
  2. தக்காளி – 1
  3. மிளகாய்த்தூள் – 1/4 மேஜைக்கரண்டி
  4. மல்லித்தூள் –  2 மேஜைக்கரண்டி
  5. மிளகு தூள் – 1/2 மேஜைக்கரண்டி
  6. சீரகத்தூள் – 1/2 மேஜைக்கரண்டி
  7. மஞ்சள் தூள் – 1/2தேக்கரண்டி
  8. இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 மேஜைக்கரண்டி
  9. மல்லித்  தழை  – சிறிது
  10. உப்பு – தேவையான அளவு

அரைக்க –

  1. தேங்காய் துருவல் – 8 மேஜைக்கரண்டி
  2. சின்ன வெங்காயம் – 8
தாளிக்க –
  1.  கடுகு – 1 தேக்கரண்டி
  2. கறிவேப்பில்லை – சிறிது
  3. நல்எண்ணெய் – 3 மேஜைக்கரண்டி
  4. தேங்காய் எண்ணெய் – 1 மேஜைக்கரண்டி
  5. சின்ன வெங்காயம் – 5
  6. செய்முறை –
  7. வெங்காயம், தக்காளியை நீளமாக நறுக்கி கொள்ளவும்.  அரைக்க கொடுத்தவற்றை அரைத்து கொள்ளவும்.
  8. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பில்லை போட்டு தாளித்து பின் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
  9. வதங்கியவுடன் தக்காளியை போட்டு நன்கு சுருள வதக்கவும். பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
  10. வதக்கியதும் மிளகாய்த்தூள், மல்லிதூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு 2 நிமிடம்  கிளறவும்.
  11. அதன்பின் 1 1/2கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட வேண்டும். 5 நிமிடங்கள் கழித்து முட்டையை உடைத்து ஊற்றி அதன் மேல் 1 மேஜைக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்ற வேண்டும்.
  12. அடுப்பை சிம்மில் 5 நிமிடம் வைக்க வேண்டும்.
  13. பின் லேசாக முட்டையை பிரட்டி விட வேண்டும். பின் 5 நிமிடங்கள் கழித்து மிளகு  சீரகப்பொடியை போட வேண்டும்.
  14. கடைசியாக அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு மல்லித்தழை  தூவி  இறக்கவும். சுவையான  முட்டைகுழம்பு ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here