10,000 ஆண்டு மர்மம் வெளிவந்தது : ஓவியத்தில் மறைந்திருந்த அதிசய வரலாறு!

இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட பண்டைய கால ஓவியம் குறித்த விசித்திர தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்தியாவின் குகை அமைப்பு ஒன்றில் வட்ட வடிவம் கொண்ட பறக்கும் பொருள்கள் சார்ந்த ஓவியங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஓவியங்கள் சுமார் 10,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாக இருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்தக் குறிப்புகள் அனைத்திலும் இவை வேற்றுக்கிரகத்தை குறிக்கும் வகையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டெடுக்கப்பட்ட ஓவியங்களைத் தொடர்ந்து ஆய்வு செய்து இது குறித்த விரிவான தகவல்களை அறிந்து கொள்ள இந்திய வான்வெளி நிறுவனங்களிடம் சட்டீஸ்கர் மாநில அரசு உதவிக் கோரியுள்ளது.

இந்த ஓவியங்களில் யுஎஃப்ஒ சார்ந்த தகவல்கள் அடங்கியுள்ளதால் பல்வேறு மேற்கத்திய ஆய்வாளர்களும் இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஓவியங்களை வேற்றுகிரகவாசிகள் குறித்து நன்கு அறிந்த நாகரீகத்தைச் சேர்ந்தவர்கள் வரைந்திருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்

சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தோர் வேற்றுக்கிரக வாசிகளைச் சந்தித்து அதன் பின் இந்த ஓவியங்களைத் தீட்டியிருக்கலாம் என்றும் கருத்துகள் வெளியாகியுள்ளன.

இது போன்ற ஓவியங்கள் பூமியின் பல்வேறு இடங்களிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து பல ஆண்டுகளாக வேற்றுக்கிரக வாசிகள் பூமிக்கு வந்து செல்கின்றனர் என்றும் கூறப்படுகின்றது.

முழுமையான ஆய்வு முடியும் வரை எந்தத் தகவலையும் உறுதி செய்ய இயலாது என தொல்லியலாளர் பகத் தெரிவித்துள்ளார்.

ஒரு வேளைக் குகை மனிதர்கள் இந்த ஓவியங்களைத் தீட்டியிருந்தாலும் இந்த ஓவியத்தில் மனிதன் போன்ற உருவமே விசித்திரமாகக் காட்சியளிக்க காரணம் என்ன? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வைத்தியரே இல்லாமல் ஒரு வைத்தியசாலை! அவதியுறும் மக்கள்!

Sun Jan 19 , 2020
x முல்லைத்தீவு – உண்ணாப்பிலவு பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர் இன்மையால் நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த வைத்திய சாலையில் கடந்த சில மாதங்களாக நிரந்தர வைத்தியர் இன்மையினால், பதில் வைத்தியர்களே சேவையாற்றி வந்துள்ளனர். இந்நிலையில் […]

விழாக்கள்