கோவிலில் இறைவனை வழிபடும் முறைகள்!

மன அமைதிக்காகவும், நம் குடும்பத்தில் உள்ளவர்களின் நலனிற்காகவும், நாம் எண்ணிய காரியங்கள் நிறைவேறுவதற்காகவும் கோவிலுக்கு சென்று கடவுளை வழிபடுகின்றோம். ஆனால் சில சமயங்களில் நம் வேண்டுதல்கள் கடவுளால் நிறைவேற்றபட காலதாமதம் ஏற்படுகின்றது. இதற்கு என்ன காரணம்? சில சமயங்களில் நம்மை அறியாமலேயே நாம் கோவில்களில் செய்யும் தவறுகள் தான். அந்த தவறுகள் என்ன என்பதைப் பற்றிக் காணலாம்.

கோவிலுக்கு செல்வதற்கு முன் அனைவரும் குளித்து விட்டு செல்ல வேண்டும். இது நாம் அனைவரும் அறிந்தது தான். ஆனால் வெறும் கைகளோடு கோவிலுக்கு செல்லக் கூடாது. நம்மால் இயன்றவரை இறைவனுக்கு பூக்கள், பழங்கள் அல்லது ஒரு கற்பூரமாவது எடுத்து கொண்டு செல்ல வேண்டும்.

சிவனுக்கு வில்வ இலையையும், பெருமாளுக்கு துளசியையும் அர்ச்சனைக்கு வாங்கி செல்வது இன்னும் சிறப்பு. கோவிலுக்கு உள்ளே செல்லும் முன்பு கோபுரத்தை வணங்க வேண்டும். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள்.

அடுத்ததாக எந்த கோவிலுக்கு சென்றாலும் முதலில் விநாயகரை தரிசனம் செய்து, தலையில் மூன்று கொட்டுகளை கொட்டிக்கொண்டு, மூன்று தோப்புக்கரணம் போட்டு வழிபட வேண்டும். விநாயகரை ஒரு முறையும் சூரியனை இரண்டு முறையும், அம்பாள், விஷ்ணுவை நான்கு முறையும், ஆஞ்சநேயரை ஐந்து முறையும் பிரதக்ஷ்ணம் செய்ய வேண்டும். முதியவர்கள் மற்றும் உடல் நலம் சரியில்லாதவர்களாக இருந்தால் ஒரு முறை மட்டும் பிரதக்ஷ்ணம் செய்தால் போதும்.

மூலவருக்கு அபிஷேகம் நடக்கும் சமயத்தில் பிரகாரத்தை பிரதக்ஷ்ணம் செய்யக் கூடாது. அபிஷேகத்தை பார்த்தால், அலங்காரத்தையும், தீப ஆராதனையையும் பார்த்து விட்டுத் தான் வீடு திரும்ப வேண்டும். நம் வேண்டுதல்களை கொடிமரத்தின் முன் நின்று வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு நமஸ்காரம் செய்து கொள்ள வேண்டும்.

மேற்கு திசையில் தலையும் தெற்கு திசையில் கால் இருக்கும் படி நமஸ்காரம் செய்வது நல்லது. சனி பகவானை நேருக்கு நேர் நின்று கும்பிடக் கூடாது. சற்று தள்ளி நின்று தான் கும்பிட வேண்டும். ஆலயத்தின் உள்ளே நம்மை விட மூத்தவர்களாக இருந்தாலும் சரி, கடவுளை தவிர வேறு யாருடைய காலிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்க கூடாது.

சண்டிகேஸ்வரர் கோவிலில் கை தட்டி கும்பிடக் கூடாது. “சிவனின் அருளை தவிர நான் வேறு எதையும் எடுத்து செல்லவில்லை” என்று மனதில் நினைத்துக் கொண்டு வணங்கி வரவேண்டும். சிவன் கோவிலில் கால பைரவரையும், பெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வாரையும் வழிபட்டால் செய்வினை தோஷங்கள் நம்மை அண்டாது.

கோவிலுக்குள் நாம் இறைவனை வழிபடும் போது நம் மனதில் வேறு எந்த சிந்தனையும் இருக்கக் கூடாது. மற்றவர்களிடம் தேவையில்லாத குடும்ப பேச்சுகளை அநாவசியமாக கோவில்களில் பேசக் கூடாது. ஆலயத்தை அசுத்தம் செய்யக் கூடாது.

கோவிலுக்கு சென்று விட்டு திரும்பும் போது வீட்டுக்குத்தான் வர வேண்டும். வேறு யார் வீட்டிற்கும் செல்லக் கூடாது. இவ்வாறு நாம் இறைவனை முழு மனதுடன் வழிபட்டால் நம் கஷ்டங்கள் அனைத்தும் விரைவாகவே குறைய ஆரம்பித்துவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பணத்தை சேர்த்து வைக்கும் அஞ்சறைப்பெட்டி ரகசியம்!

Sat Jan 18 , 2020
x அஞ்சறைப்பெட்டி என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. இதை மசாலா பெட்டி என்றும் சிலர் கூறுவார்கள். பெரும்பாலான வீடுகளில் இந்த பெட்டியானது கண்டிப்பாக இருக்கும். இதுவரை உங்களது சமையல் அறையில் இந்த அஞ்சறைப்பெட்டி இல்லாமலிருந்தால் உடனடியாக […]

அதிகம் படித்தவை

விழாக்கள்