மறுத்தார் மகிந்த! உடனடியாக கொடுத்தார் கோட்டாபய- பொது மக்களுக்கு கிடைத்த மகிழ்ச்சி!

பெருந்தோட்ட மக்களின் அடிப்படை பிரச்சினைகளின் ஒன்றான 1000 ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பில் பிரதமர் மகிந்த ராஜபக்ச வெகு விரைவில் தீர்வு காணப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில் அவர்களின் பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் முகமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சம்பள உயர்வை அதிகரித்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் தமிழ் ஊடக ஆசிரியர்களுடனான சந்திப்பின்போது பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. அதில் மலையக மக்களின் சம்பள உயர்வு தொடர்பில் செய்தி ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதற்குப் பதில் வழங்கிய பிரதமர் மகிந்த ராஜபக்ச,

“பெருந்தோட்ட மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 1000 ரூபா நாள் சம்பளம் தொடர்பில் தோட்ட கம்பனிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம். வெகுவிரைவில் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த குறைந்த வேதனத்தை, எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல், ஆயிரம் ரூபாவாக நிர்ணயிப்பதற்கு தீர்மானித்திருப்பதாக அறிவித்திருக்கிறார்.

மதியம் இடம்பெற்ற சந்திப்பில் பிரதமர் மகிந்த ராஜபக்ச பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வெகு விரைவில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்று குறிப்பிட்ட நிலையில், அதே நாளில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்தியிருப்பது மலையக மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தமிழர் திருநாளை பொங்கல் பொங்கிக் கொண்டாடிய அமெரிக்கத் தூதுவர்!

Wed Jan 15 , 2020
x தமிழர் திருநாளான தைப் பொங்கல் தினத்தில் பொங்கல் பொங்கி கொண்டாடியுள்ளார் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி டெப்லிட்ஸ். இது தொடர்பில் தன்னுடைய டுவிட்டர் தளத்தில் புகைப்படங்களைப் பதிவிட்டிருக்கும் அவர், இலங்கையில் தைப் […]

விழாக்கள்