பிக் பேஷ்: அடிலெய்ட் அணியை வீழ்த்தி பிரிஸ்பேன் அணி அபார வெற்றி!

பிக் பேஷ் ரி-20 தொடரின் 36ஆவது லீக் போட்டியில், பிரிஸ்பேன் ஹீட் அணி 7 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது.

பிரிஸ்பேன் மைதானத்தில் இன்று நடைபெற்ற இப்போட்டியில், பிரிஸ்பேன் ஹீட் அணியும், அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி, 19 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 110 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, ராஷித் கான் 28 ஓட்டங்களையும், ஜோனாதன் வெல்ஸ் 14 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பிரிஸ்பேன் ஹீட் அணியின் பந்துவீச்சில், ஜேம்ஸ் பெட்டின்சன் 5 விக்கெட்டுகளையும், ஜோஷ் லோலர் மற்றும் பென் கட்டிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்வெப்சன் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 111 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பிரிஸ்பேன் ஹீட் அணி, 15.2 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் பிரிஸ்பேன் ஹீட் அணி 7 விக்கெட்டுகளால் அபார வெற்றியை பதிவு செய்தது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, மெட் ரென்ஷோவ் ஆட்டமிழக்காது 52 ஓட்டங்களையும், ஏபி டிவில்லியர்ஸ் 40 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் பந்துவீச்சில், மைக்கேல் நீஸர், ராஷீத் கான் மற்றும் லியாம் ஒ கோனர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, பிரிஸ்பேன் ஹீட் அணியின் பந்துவீச்சில், 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜேம்ஸ் பெட்டின்சன் தெரிவு செய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பிரபல நடிகரின் குடும்பத்தில் நேர்ந்த மரணம்! திரையுலகம் சோகம் - வருத்தத்தில் ரசிகர்கள்!

Tue Jan 14 , 2020
x ஹிந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன். உலகம் முழுக்க இவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். இவரின் மகள் ஸ்வேதா பச்சன். நிகல் நந்தா என்பவரை அவர் கடந்த 1997 ல் திருமணம் செய்து […]

விழாக்கள்